பக்கம் எண் :

குடியாட்சி169

பர். மூன்றாண்டுக்கு ஒருமுறை பிரஞ்சு மேலவையைப் போல் இதன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருள் மூன்றில் ஒரு பகுதியினர் விலக, புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலவையின் தேர்தல் தொகுதியில் நூறாயிரம்பேர் வரை மொழி உரிமை உடையவர்கள் கீழவையில் மொத்தம் உறுப்பினர் 375 பேர். இவர்களில் 250 பேர் பிரிட்டிஷ் இந்தியமாகாண அவைகளால் தேர்ந்தெடுக்கப்படுவர். கீழவையின் தேர்தல் இங்ஙனமாக மறைமுகத் தேர்தலாகும்.

   1935-ம் ஆண்டுச் சட்டத்தின் முற்போக்குமிக்க பகுதி மாகாண அரசியலேயாகும். இதில் மொழியாளர் தொகுதி மிகவும் விரிவாக்கப்பட்டது. முன்னைய மொழியாளர்கள் மட்டுமின்றி 18 ஆண்டுகட்கு மேற்பட்ட எழுதவாசிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் இதில் உரிமை பெற்றனர். ஆயினும் நூற்றுக்கு எட்டுப்பேரே கையொப்பமிடத் தெரிந்தவர்களாயிருக்கும் இப்பெருநிலப் பரப்பில் இம் முன்னேற்றத்தால் நூற்றுக்குப் பத்துப் பன்னிரண்டு விழுக்காடுதான் உரிமைபெற்றனர். எல்லா மாகாணங்களும் சேர்ந்து இதன்படி உரிமைபெற்றவர்கள் ஏறக்குறைய மூன்றுகோடிப் பேர்.

   சிறுபான்மை வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆகியவர்கட்கும் வெளிநாட்டு வணிகர் நலங்களுக்கும் பாதுகாப்பளிப்பதை முன்னிட்டு மாகாணத்தலைவர் முதல்தலைவர் ஆகியவர்கட்குச் சட்டங்களை ஏற்கவும் மறுக்கவும் உரிமைகள் தரப்பட்டன. ஆயினும் பொறுப்பாட்சியற்ற மேலரசியலில் இப்பாதுகாப்பு வேண்டப்படுவதன்று. மாகாண ஆட்சியில் உண்மையில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படாதென்று அமைச்சர்களுக்கு உறுதிதரப்பட்டது.