பக்கம் எண் :

170குடியாட்சி

   மேலரசியலைப்போலல்லாமல் மாகாணங்களில் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவைகளிலிருந்தே தெரிந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கே பொறுப்புடையவராயிருந்தனர். எனவே முதல் தடவையாகப் பேரளவில் பொறுப்பாட்சி இச்சட்டத்தால் மாகாணங்களில் வழங்கப்பட்டது என்னலாம். ஒரு சில தனி உரிமைகள் நீங்கலாக மாகாண அரசியலிற்பட்ட உரிமைகள்யாவும் அமைச்சர் ஆட்சிக்கு வந்தன. ஆயினும் மேலரசியலைச்சார்ந்த துறைகள் பல இருந்தன. மேலரசியலில் பொறுப்பாட்சி இல்லாததால் உண்மையில் இவ்வாட்சி குறைபட்ட பொறுப்பாட்சியேயாகும்.

   இப் புதிய சட்டத்தின் படி நடைபெற்ற தேர்தலில் மேலரசியல் மன்றிலும் மாகாணங்களிலும் முஸ்லிம்களல்லாத தொகுதிகளில் நாட்டுரிமைக்கட்சி பெருவாரியாக இடம்பெற்றது. சென்னை, பம்பாய், ஒன்றுபட்ட மாகாணம் முதலிய ஏழுமாகாணங்களில் அது அமைச்சர் குழு அமைத்து ஆண்டது. முஸ்லிம்கள் மிகுதியான மாகாணங்களில் மட்டும் அது இடம்பெறவில்லை. ஆயினும் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபின் போரில் நாட்டுரிமைக் கட்சி பிரிட்டனுடன் ஒத்துழைக்க மனமில்லாது ஆட்சியைக் கைவிட்டது. சிற்சில இடங்களில் மற்றக் கட்சிகள் தனித்தும் கூடியும் வந்து ஆட்சிசெலுத்தின. சில இடங்களில் நடைமுறைக் குழு அல்லது (Advisor’s Regime) அறிவுரையாளர் குழு ஆட்சி நடைபெற்றது.

   போர்க்காலத்திலும் அதன் பின்னும் நாட்டுரிமைக் கட்சியின் பிடியினின்று இரண்டினங்கள் திமிறி எழுந்து வருகின்றன. இன்னோரினம் எழமுயன்று வருகின்றது. உண்மையில் இம்மூன்றினங்களும், திராவிட இனத்தின்