பரப்பு, மக்கள் தொகை, இனம், மொழி, சமய வேறுபாடுகள், ஒற்றுமையின்மை ஆகிய எல்லா வகையிலும் உருசியா இந்தியாவை ஒத்தநாடு, பரப்பில் அது இந்தியாவைப்போல் ஐந்து மடங்கு பெரிது. ஆனால் மக்கள் தொகையில் ஐந்தில் இரண்டுபங்கு. அதில் உருசிய இனத்தவரின் உட்பிரிவினரான பேருருசியர், சிற்றுருசிரியர், வெள்ளை உருசியர் ஆகியவர்களும், போலர்களும் (போலந்து மக்கள்) யூதர்களும், பின்களும் (பின்லாந்து மக்கள்) எலட்களும் (லாட்விய மக்கள்) துருக்கியரும் தார்த்தாரியரும் கக்கேசியரும் மங்கோலியரும் உள்ளனர். உருசிய நாட்டின் இவ்வினப்பெருக்கம் இந்தியா நீங்கலாக மற்ற எந்தப் பரப்பினும் மிகுதியே. சமயவகையிலும் கிறித்துமதத்தின் பல உட்பிரிவுகளும் இஸ்லாமும் உள்ளன. இதிலும் இந்தியாவிற்கு இது குறைவான பெருக்கமுடையதே. மொழியிலும் இந்தியாவிலுள்ள மொழிகளுக்கு இந்நாட்டின் மொழிவகைகள் எவ்வளவோ குறைவுதான். இப்போது உருசிய நாடு மேற்கே பால்டிக் கடலையும் வடக்கே வடமாகடலையும் கிழக்கே பசிபிக் மாகடலையும் சப்பானையும் தெற்கே மங்கோலியா, மஞ்சூரியா, சீனா, இந்தியா, ஆப்கானித்தானம், பாரசிகம், காஸ்பியன்கடல், காக்கசஸ் தொடர், கருங்கடல், தானியூப் ஆறு, ருமேனியா, ஹங்கேரி, செக்கோஸ்லவேகியா, போலந்து, செர்மனியின் கிளை நாடாகிய கிழக்குப் பிரஷ்யா ஆகியவற்றின் எல்லைகளையும் தன் எல்லைகளாகக் கொண்ட பரப்பு ஆகும். இதன் தலைமையான நில இயல்கூறுகள் ஐரோப்பாவில் பால்டிக்கரையோர நாடுகளான லிதுவெனியா, லாட்வியா, எஸ்தோனியா ஆகியவையும் |