முதலுலகப் பெரும் போரில் உருசியா, பிரிட்டன் முதலிய நேசநாடுகள் பக்கம் நின்று போரிட்டது. ஆனால் உருசியப் பேரரசராகிய சார் ஆட்சி போர் முயற்சியும் முற்போக்கும் திறனுமற்றதாய் மக்கள் வெறுப்புக்களாயிற்று. போர்க் கால விலைவாசிகளைக் கட்டுப்படுத்த முடியாமையால் பட்டினியும் பஞ்சமும் தலைவிரித்தாட இடமேற்பட்டது. இவ்வகையில் மிக மட்டமான சீர்திருத்தங்களை மன்றங்கள் கோரியபோது அக் கோரிக்கைகளும் மறுக்கப்பட்டன. நடுநிலையுடைய மன்றங்களே அரசியலை எதிர்த்து அமர்க்களம் செய்யலாயின. நாட்டில் புரட்சித் தீ எழுந்தது. போர் முடிவுக்கு ஓராண்டுக்கு முன் 1917 மார்ச் சில் (தற்போது லெனின்கிராடு என்று அழைக்கப்படும்) பீட்ரோகிராடிலுள்ள தொழிலாளரும் பட்டினியால் வாடிய ஏழை மக்களும் ‘உணவு வேண்டும் ; உணவு வேண்டும்’ என்ற கூக்குரலுடன் ஊர்வலம் வந்தனர். அரசாங்கம் படை வகுப்புக்களை அனுப்பி அவர்களைக் கலைக்க முயன்றது. ஆனால் புரட்சி யார்வம் படைகளையும் விட்டபாடில்லை. படைகள் மக்கள் மீது பாய மறுத்ததுடன் நில்லாது அவர்களுடன் சேர்ந்துகொண்டன. இங்ஙனம் வலிமை பெற்று மக்கள் சிறைக் கூடத்தை உடைத்து அரசியல் சிறையாளிகள் அனைவரையும் விடுவித்தனர். பேரரசரும் அவர் குடும்பத்தினரும் சிறைப்படுத்தப்பட்டனர். அரசியல் ஒழுங்குகளுக்குக் காத்திராமல் மன்ற உறுப்பினர் சிலர், ஒரு செயற் குழுவாய் அமைந்து தற்காலிக அரசியல் ஒன்று அமைத்தனர். நடுநிலையாளரின் தலைவரான மிலியுகோவ் முதலிலும், அவரினும் வெறித்தவாறன சீர்திருத்தக் குடியாட்சிக் கட்சித் |