பக்கம் எண் :

குடியாட்சி179

தலைவரான கெரன்ஸ்கி அவரையடுத்தும் தலைவராயினர். ஆனால் மேன்மேலோங்கி யெழும் புரட்சி வேகத்தை அவர்களால் தடைப்படுத்த முடியவில்லை. கார்ல்மார்க்சின் கொள்கைகளைப் பின்பற்றிய பொது உடைமைக்கட்சி, வேறு அரசியல் அமைத்து ஆணைகள் பிறப்பித்தது. நாளடைவில் தற்காலிக அரசாங்கம் அதனுடன் இணைந்து செயலாற்றிற்று.

   பொது உடைமைக் கட்சியின் வெறித்த முற்போக்குக் குழுவினரான போல்ஷ்விக்கர் நிக்கோலாய் லெனின் லியோன் ட்ராட்ஸ்கி ஆகியவர்கள் தலைமையில் அரசியல் புரட்சி போதாது; வாழ்வியல், பொருளியல் புரட்சியும் வேண்டுமென்று துணிந்து அதற்கியை நாட்டை முற்றிலுமே திருத்தியமைக்கத் தொடங்கினர். முதலில் அவர்கள் போரை நிறுத்தும்படி நேச நாட்டினருக்கு அறிவித்தனர். அவர்கள் அதற்கு இணங்காது போகவே, சற்று மிகுதியாக செர்மானியருக்கு விட்டுக் கொடுத்துத் தனி உடம்படிக்கை செய்தனர். பின் பேரரசரையும் அவர் குடும்பத்தினரையும் தூக்கிலிட்டு ஒழித்து, அவர்களைச் சார்ந்த வரையும் அரசியலில் அவர்களுடன் ஒத்துழைத்தவர்களையும் வெளியேற்றியும் ஒறுத்தும் விலக்கிப் பொதுஉடைமை ஆட்சியை ஏற்படுத்தினர். பழைய அரசியல் ஒழுங்கை மீறி ஒரு கட்சி ஏற்படுத்திய இவ் அரசியலமைப்பே பொது உடைமை உருசியாவின் அரசியலமைப்புக்கு அடிப்படையான எழுத்து மூல அடிப்படை ஆயிற்று.

   உருசியப் பேரரசின் வீழ்ச்சியின் பின் அதன் உறுப்புக்களான நாடுகள் தனித்தனியாய்ப் பிரிந்தே நின்றன. பொது உடைமை அமைப்பு ஏற்பட்ட இப்பகுதி அவ்வரசுகளை விடுதலையுடைய தனியரசு பெற்ற சரிநிகர் நாடு