கப்பட்டு வேரூன்றிய முதலாளித்துவ அரசியலை எதிர்த்து, அதனையும், அது வேரூன்ற இடந்தந்த பொருளியலமைப்பையும் மாற்றியமைத்தல் முடியும் எனக் கருதினார். இதன் பயனாக அவர் 1864ல் உலகத் தொழிலாளர் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்த உலகத் தொழிலாளர் மகாநாடு ஒன்று கூட்ட ஏற்பாடு செய்தார். இதுவே 1864ம் ஆண்டைய முதல் உலகத் தொழிலாளர் கூட்டுறவமைப்பு ஆகும் (First International of 1864) . பாரிசில் நடைபெற்ற இவ்வமைப்புச் சிலகாலம் நின்று புதிய திட்டங்கள் வகுத்ததாயினும் பிரான்சில் அச்சமயம் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களில் சிக்கிச் செயலற்றுப் போயிற்று. எனவே, கார்ல்மார்க்சும் வேறு சில அறிஞரும் கூடி 1889-ல் இரண்டாவது உலகக் கூட்டுறவமைப்பு ஒன்று ஏற்படுத்தினர். இது ஏழு முறைகூடி உலகில் தொழிலாளர் இயக்கத்தையும் பொதுவுடைமை முறையையும் பரப்ப முயன்றது. பிரிட்டனுட்படப் பல அரசியல்கள் இக்கருத்துக் கெதிராகத் தம் முழுச் செல்வாக்கையும் பயன்படுத்தின. முதல் உலகப் போர் குறுக்கிட்டு இக் கூட்டுறவைத் தழைக்க விடாமல் செய்தது. முதலுலகப் போரின்பின் லெனின் தலைமையில் மூன்றாம் அமைப்பு ஏற்பட்டது. இது தற்காலிகமாகப் பொது உடைமை அமைப்பை உருசிய நாட்டளவில் கட்டுப்படுத்திக் குறுக்கிக் கொண்டது. இதனினும் முனைந்து உலகியக்கத்தைப் பரப்ப முயன்றவாக்ள் டிராட்ஸ்கி தலைமையில் 4-ம் அமைப்பு ஒன்று நிறுவினர். நாடுகளுடன் நாடாய்ப் போரும் உடம்படிக்கையும் வாணிக உறவும் கொள்ளவேண்டும் நிலையிலிருந்த உருசியாவுக்கு இப் பொதுவுடைமை அரசியல் கால் கட்டாய் |