பக்கம் எண் :

184குடியாட்சி

இருந்ததனால் இரண்டாம் உலகப் போரிடையில் லெனினால் இது கலைக்கப்பட்டது. இதன் தலைவராகிய டிராட்ஸ்கியும் அதற்குமுன்பே லெனிலுடன் மாறுபட்டு வெளியேறிப் பல நாடுகளில் திரிந்து அமெரிக்காவில் இருக்கும் போதுத் கொலையாளர் கைக்கு இரையாயினர்.

   மூன்றாவது அமைப்புடன் ஒத்துழைத்து லெனின் அமைத்த கூட்டுறவு அரசியலமைப்பில் அரசியலுரிமையும் மொழியுரிமையும் உடலுழைப்புடைய தொழிலாளிகள், உழவர் ஆகியவர்கட்கே முதல்படியாகத் தரப்பட்டன. பொது உடைமை ஆட்சியை நிலைநிறுத்த இத்தகையோரிடையே படைவீரரும் கடற்படை வீரரும் திரட்டுவது இன்றியமையாததாயிருந்ததால் அவர்களும் உரிமைபெற்றனர். முதலாளிகள், வாணிகர், சமயத் தலைவர் ஆகியவர்கள் சுரண்டுபவர்கள், சுரண்டுபவர்களுக்கு ஆதரவளிப்பவர், உடலுழைப்பற்றவர் என்ற கருத்துடன் உரிமை மறுக்கப்பட்டு விலக்கப்பட்டனர்.

   இந்தியா முதலிய மற்ற நாடுகளைப் போலவே உருசியாவிலும் தேர்தல் தொகுதிகள் இரு பிரிவாக விளங்குகின்றன. ஒன்று நகரத் தொகுதி; மற்றொன்று நாட்டுப்புறத் தொகுதி. கூட்டுறவில் உறுப்பினரான அரசுகளில் கூட சில தனி அரசுகளாகவும் சில பேரரசுக்கு உட்பட்ட சிறு கூட்டுறவுகளாகவும் இருக்கின்றன. அக்கூட்டுறவுகளுக்குள்ளும் துணைக்கூட்டுறவுகள் உண்டு. (இரண்டாம் உலகப் போருக்குப்பின் இவற்றுக்குத் தனிப்பட வெளி நாட்டாருடன் உடம்படிக்கை செய்யவும் போர்செய்யவும் போரிலிருந்து விலகவும் உரிமை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது) தனி அரசியல்களுள் ஊர்கள் முதல் கூறாகவும் அவற்றை உட்படுத்திய அடுத்த கூறு