பக்கம் எண் :

குடியாட்சி185

கூற்றங்கள் (Volost or Taluqs) ஆகவும் அதற்கு மேற்பட்டவை வட்டங்கள் (Ugezd or Districts) ஆகவும் மண்டலங்களாகவும் (Oblast or divisions) வகுக்கப்பட்டன. இப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் ஒரு தனி அவையும் அவைத்தலைவரும் உண்டு. ஊரவைக்கு அப்பால் ஊரிலுள்ள உழவரும் தொழிற்சாலைத் தொழிலாளரும் உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பர். ஊரவைகளே கூற்ற அவைகளுக்கு உறுப்பினர் தேர்ந்தெடுத்தன. அவற்றிலிருந்து 1000 ஊராருக்கு ஒருவராக வட்ட அவைக்கும், வட்ட அவையிலிருந்து 25,000 ஊராருக்கு ஒருவராக மண்டல அவைக்கும் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர். நகர அவைகள் வேறு அமைக்கப்பட்டு அவற்றிலிருந்து மண்டல அவைக்கு 5000 நகர மொழியாளருக்கு ஒருவராக உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

   மண்டலத்துக்கு மேற்பட்ட பிரிவு மாவட்டம் (Gubernia or Province) ஆகும். கூற்ற அவையிலிருந்து 10000 ஊராருக்கு ஒரு உறுப்பினர் வீதமும், 10000 நகர அவைகளிலிருந்து 2000 மொழியாளருக்கு ஒரு உறுப்பினர் வீதமும் மாவட்ட அவைக்கு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டங்களை உள்ளடக்கிய தனியரசின் பேரவைக்கு மாவட்ட அவையிலிருந்து 1,25,000 ஊராருக்கு ஒரு உறுப்பினர் வீதமும் நகர அவைகளிலிருந்து 25,000 மொழியாளருக்கு ஒரு உறுப்பினர் வீதமும் அனுப்பப்பட்டனர்.

   உருசியப் பெருநாட்டின் கூட்டுறவுப் பேரவைக்கு மாவட்ட அவைகள் 1,25,000 மொழித்தரவினருக்கு ஒரு உறுப்பினரும், நகர அவைகள் 25,000 மொழித்தரவினருக்கு ஒரு உறுப்பினரும் தேர்ந்தெடுத்தன. இப்பேரவை