பக்கம் எண் :

186குடியாட்சி

ஐரோப்பிய முறைப்படி இரண்டு அவைகளாயமையாது ஒரே அவையாய் இலங்குகிறது. வாழ்வியலிலும் பொருளியலிலும் பெருமக்கள் ஆட்சிஒழித்த பொது உடைமை உருசியப் பெருநாட்டிற்கு மேலவை வேண்டுவதில்லையன்றோ? இப்பேரவை ஆண்டுக்கு ஒரு முறை சிலநாள் கூடும். இடைப்பட்ட காலத்தில் நிலவர ஆட்சிமுறையைக் கவனிக்க இப்பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு உயர்நிலை நடைமுறைக்குழு (Union Central Executive Committee or Trik) அமைக்கப்பட்டு மூன்று திங்களுக்கு ஒரு முறையாக இரண்டுவார காலம் கூடும். இக்குழுவும் 400 உறுப்பினர் வரை அடங்கிய பெருங் இழுவாதலால் இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறை உட்குழு (Presidenson) ஒன்று அமைக்கப்பட்டு நிலைகான ஆட்சிச் செய்திகளைக் கவனிக்கிறது. இதில் 21 உறுப்பினர் இருப்பர். இதனின்றும் தலைவர் லெனினும் கட்சித் தலைவர் சிலரும் அமைந்த செயற்குழு ஒன்று உலைமைதாங்கும்.

   கூட்டுறவு நடைமுறைக்குழுவில் மட்டும் அமெரிக்கா முதலிய மேலை அரசியலமைப்பின் ஈரவை அமைப்புச் சற்றுக் காணப்படுகிறது.இக்குழு இரு குழாமாகப் பிரிந்து இயல்கிறது. ஒன்றில் தனியரசுகளுக்கு மக்கள் குழு விழுக்காட்டின்படி பேராண்மை தரப்படும். மற்றொன்றில் இனவகை நாகரிக வகைக்கு ஒரேநிலைப்பட்ட பெயராண்மை வழங்கப்படுகிறது. முதலது கூட்டுறவு மன்றம் (Union of the Soviet) என்றும் பின்னது இனமன்றம் (Soviet of Nationalities) என்றும் பெயர் பெறுகின்றன.