சட்டங்கள் பெரும்பாலும் கீழவைகளைக்கலந்த்தும் ஆராய்ந்தும் செய்யப்படினும், அவற்றின் இணக்கத்துக் குட்பட்டு நடைமுறைக் குழுவாலும் உட்குழுவாலும் தலைவராலும் கட்டளைகளாகப் பிறப்பிக்கப்படலாம். நடைமுறை யாட்சியைக் கூட்டுறவு அமைச்சர் குழு (Union Council of Commissioners) ஒன்று நடத்துகிறது. இதில் 15 அமைச்சர்கள் இருப்பர். இவர்கள் நடைமுறைக் குழுவால் அமர்வுபெற்று அவற்கும், இறதியில் பேரவைக்கும் பொறுப்பு உடையவர்கள். அமைச்சர் குழுவினுள் ஒருவர் தலைவராகவும் நால்வர் துணைத்தலைவராகவும் இருப்பர். ஒவ்வொருவருக்கும் வெளிநாட்டுறவு, போர், கடற்படை, வெளிநாட்டு வாணிகம், போக்குவரவு, தொழிலாளர் நலம், உணவு, பொருளியல் ஆகிய அரசியல் துறைகள் பொறுப்பாகத் தரப்படுகின்றன. பேரவைகள் தலைவர் ஆணைகட்கு உட்பட்டு அவ்வத்துறைகளில் அமைச்சர்களும் அத்துறையின் பணியாளருக்கும் நாட்டுமக்களுக்கும் கட்டளைகள் பிறப்பிக்கலாம். அரசியல் ஒழுங்குப்படி ஒவ்வொரு தனியரசும் தத்தமக்குப் பிடித்த அரசியலைப் பின்பற்றலாம். ஆயினும் அடிப்படைக் கொள்கைகள் எல்லாத் தனியரசுகளிலும் பரவிய கட்சிக்கிளை யமைப்பாலும் தொடக்கத்திலேயே ஏற்பட்ட அரசியலமைப்பு உடம்படிக்கையாலும் கட்டுப்படத்தப்பட்டு ஒரே நிலையில் வளர்ச்சியடைகின்றன. தனியரசுகளிடையே சச்சரவுகளோ, பொதுமக்களிடையே பூசலோ முணுமுணுப்போ உருசியாவி லில்லை. இரண்டாம் உலகப்போரில் வேறெந்நாட்டு மக்களையும் விட உருசிய மக்கள் ஒன்றுபட்டு நின்று உலகவரலாறு என்றும் எங்கும் காணாதமாபெரும் தன் மறுப்புகள் செய்து ஐரோப் |