பக்கம் எண் :

188குடியாட்சி

பிய வல்லரசுகளைத் திணறவைத்த நாசிப் பெரும்படைகளை எதிர்த்து முறியடித்தது ஒன்றே இவ்வொற்றுமையின் வன்மைக்கு ஒரு நற்சான்று ஆகும்.

   உருசியப் பொதுஉடைமை அரசியல் பொது உடைமைக் கோட்பாட்டைச் செயலளவில் தன் நாட்டெல்லைக்குள் கட்டுப்படுத்தினும், தன் வெற்றிகரமான ஆட்சியாலும், அதன் விளைவாலும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாய் விளங்குகிறது. குடியாட்சிப் பெரும்பேச்சுப் பேசும் ஐரோப்பிய வல்லரசுகள் ஆட்சியின் கீழுள்ள நாடுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தனியாட்சிக்கும் விடுதலைக்கும் தகுந்த பருவநிலை அடையாமலிருக்க, ஒரு சில ஆண்டுகளுக்குள் ஐரோப்பிய வல்லரசுகளை வென்று அதிரவைக்கும் நாடாக உருசியாவைப் பொதுஉடைமை ஆக்கிவைத்திருக்கிறது. சார் ஆட்சியில் உருசியா கல்வியில் இந்தியாவிலும் கீழ்ப்பட்டிருந்தது. இன்று 100க்கு 95 பேர் கல்வியறிவுடையவராயிருக்கின்றனர். பொதுமகளிர் வாழ்வை எந்நாடும் அகற்றாத கறையை உருசியா அகற்றி ஆடவருடன் ஆடவராகத் தொழிலிலும் அறிவியலிலும் போரிலும் ஈடுபடும் பெண்டிரை உண்டுபண்ணியிருக்கிறது. ஐரோப்பிய அறிஞர்கள் மூக்கில் கைவைத்து நோக்கும்முறையில் தனி அரசுகளுக்குத்தனி வெளிநாட்டுறவு உரிமையைக் கொடுத்துக் தன் உள்ளார்ந்த ஒற்றுமையை, படைவலியால் ஏற்படமுடியா அன்பு ஒற்றுமையை, உருசியா காட்டியிருக்கிறது. அரசியல் திறத்திலோவெனில் ஸ்டாலின் உலக அரசியல் சூதாட்டக்காரரிடையேயும் சூதாட்டக்காரர் எனப் பேர்வாங்கியிருக்கிறார். ஆனால் அவர் சூதாட்டம் அறிவையும் சூழ்ச்சியையும் கருவியாகக் கொண்டனவே யன்றி அடிப்படை நோக்கமாகக்