பக்கம் எண் :

குடியாட்சி189

கொண்டதல்ல உருசியமக்கள் அன்பையும் தொழிலாளர், ஏழைமக்கள் அன்பையும் அடிப்படையாகக் கொண்ட அன்பு முறையில் நின்றே அச்சூழ்ச்சி வலிமை பெறுகிறது.

   வேற்றுமைகளுள்ள நாட்டில் வலியுறுத்திச் சுமத்தப்பட்ட ஒற்றுமை வேற்றுமையை வளர்ப்பதேயாகும். என்றும் வேற்றுமையை ஒப்புக்கொண்டு அவ்வடிப்படையில் அன்புமுறையில் ஏற்படும் ஒற்றுமை அறிஞர்களின் பார்வையில் வேற்றுமையாகத் தோற்றினுந் தொலைநோக்குடையவர் அதனை உருவான ஒற்றுமைக்கு உதவும் ஒரு படிமுறையாகவே கொள்வர் என்றும் உருசிய அரசியில் வளர்ச்சி எடுத்துக் காட்டுகின்றது.


11. தமிழ்நாட்டிற்கான படிப்பினைகள்

இன்று உலகில் பல்வேறு இனங்கள் தனித்தும் கலந்தும் வேறுபட்டும் பலபல கலைப் பண்பாடுகளையும் வாழ்வியல் ஒழுங்குகளையும் அரசியல் வகைகளையும் பேரரசுகளையும் வல்லரசுகளையும் அமைத்துள்ளன. அவற்றுள் தலைமைபெற்று விளங்கும் இனம் ஆரிய இனமே என்பது மிகையாகாது. அரசியலில் மட்டுமன்றி வாழ்வியலிலும் வாணிகக் கைத்தொழில் துறைகளிலும் செல்வத்திலும் செல்வாக்கிலும் மேம்பட்டு விளங்குவதுகூடப் பெரும்பாலும் இவ்வினமேயாகும். இவ்வினத்துடன் ஒன்றுபட்டு மேம்பாடடைந்திருக்கும் ஆரியரல்லாத இனப்பிரிவு யூதப்பிரிவு ஒன்றுதான். இதுவும் தொகையில் சிறுபான்மையாகும். இதன் பழம் பெருமை முற்றும் அகன்று இது நாடற்று அரசியலற்று நிலவுகின்றது. ஆயினும் இனப்