பக்கம் எண் :

குடியாட்சி19

  ஆரியர் வரவுக்காலத்தில் ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் நாகரிகமுறையிலும் வாழ்வியல் அரசியல் நிலைமைகளிலும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவு வேற்றுமைகள் இருந்தன. ஆரியர் முல்லைநில வாழ்க்கை நிலையில் நாடோடிகளாய் நாடுநகரம் ஊர் இன்றிக் குடியும் குலமும் குலத்தலைவரும் உடையவராய், உழவு, வாணிகம் முதலிய தொழிலின்றி, ஆடு மாடு மேய்த்தலும் வேட்டையாடலும் தொழிலாகக் கொண்டவராய்க் குடி குலம் தவிர வாழ்வியல் பாகுபாடு தொழில் பாகுபாடு அற்றவராய், இயற்கைத் தோற்றங்களி லீடுபட்டுப் பலதெய்வங்களை வழிபடுபவராய் இருந்தனர். ஆனால் ஆரியரல்லாத மக்களோ குறிஞ்சி நிலவாழ்வும் முல்லைநில வாழ்வும் கடந்து மருதநிலவாழ்க்கையும் நெய்த நிலைவாழ்க்கையும் உடையவராயிருந்தனர். அவர்கள் நாடு நகரம் ஊர் கோட்டை முதலியவைகளுடன் பச்சைச் செங்கலாலும் சுட்டசெங்கலாலும் கட்டிய வீடுகளும் செங்கல்பாவிய தெருவீதிகளும் உடையவராயிருந்தனர். உழவும் வாணிகமும் அவர்களிடையே செழித்திருந்தன. ஆரியரைப்போல் அவர்கள் தழையாடையும் மரவுரியாடையும் அணியாது பருத்தி நூலாடையணிந்து அதற்கான நெசவு முதலிய தொழில் பேணியிருந்தனர். அவர்கள் முதலில் எலும்புகளாலும், பிற் காலங்களில் வெள்ளியாலும் பொன்னாலும் பூண்கள் செய்தணிந்தனர். செம்பு, வெண்கலம் ஆகியவற்றால் கருவிகள் செய்தனர். ஆரியர் வருங்காலத்துக்குள் இரும்பும் வழங்கலாயிற்று. அவர்கள் ஒழுங்கான நாடு நகர அரசியலையுடையவராய் அரசனுக்கடங்கிய ஆட்சியுடையவராயிருந்தனர். ஆனால் ஆரியர்போல ஆட்சி முறை முற்றிலும் அரசன் அல்லது குலத்தலைவனிடம்