சென்று அமைவதாயில்லை, அவ்வந்நகரங்களிலும் ஊர்களிலும் நகரவைகளும் ஊரவைகளும் இருந்து மேற்போக்காக அரசனாணையில் நின்று தன்னாட்சி நடத்தின. சமயவாழ்வில் அவர்களும் இயற்கைத் தெய்வங்களாகிய திணைநிலத் தெய்வங்களை உடையவராயிருப்பினும் நாளடைவில் வீரர்வழிபாடும் பிதிரர் வழிபாடும் உடையவராய் இறுதியில் ஏதாமொரு தெய்வத்தைக் குலதெய்வமாகவும் ஊர்த்தெய்வமாகவும் கொண்டனர். ஆரியர் வரவுக்கு நெடுநாள் முன்னரே அவர்கள் அன்னை வடிடைவயோ, எருதும் முக்கோலும் தாங்கிய சிவனுருவையோ தலைமையான தெய்வமாகக் கொண்டு அவர்கட்குக் கோயிலும் வழிபாடும் அமைத்தனர். ஆரியரல்லாதார்தாம் பலதொழில் பாகுபாடுகளுடைய வகுப்புகளை முதலில் கொண்டடிருந்தனர். குருமாரும் அறிவியல் ஆராய்ச்சியில் முனைந்த அறிஞரும் அவர்களிடையேதான் முதன் முதலில் ஏற்பட்டனர். ஆரியர்கள் இந்தியாவில் திராவிட அரசரிடமிருந்தும் கிரீசில் எகிப்திய குருமாரிடமிருந்துமே தம் முதல்கலையறிவு பெற்றனர் என்று வரலாறு காட்டுகிறது. விசுவாமித்திரர், கனகர், கண்ணன் முதலியவர்கள் ஆரியருக்கு ஆன்ம அறிவு கற்பித்த திராவிட அரசரேயாவர். ஆரியரல்லாதார் தாக்குத்தான் ஆரியரை நாகரிகப் படுத்திற்று என்பதை, அவர்கள் பல நாடுகளில் அடைந்த முன்னேற்றத்தை ஒப்பிட்டு நோக்கினால் காணலாம். தெற்கு நோக்கிவந்த ஆரியர் நாகரிகப்படியில் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நாகரிகமைடந்தும் வடக்கே சென்ற ஆரியர் அந்நிலையை முந்நூறு ஆண்டுகள் வரை அடையாமலிருந்தனர். தெற்குநோக்கி வந்தவருள்ளும் |