பக்கம் எண் :

குடியாட்சி21

இத்தாலியில் வந்த ஆரியர் நடுஉலகத் தொடர்புடைய கிரேக்க ஆரியரிடமிருந்தும் அவர்களும் பாரசிகம், இந்தியா ஆகிய இடங்களில் குடியேறிய ஆரியரிடமிருந்தும் நாகரிகப் பண்புகளை வரவேற்றனர் என்று காணலாம். நேர்மாறாக ஆரியரல்லாதார் ஆரியத்தாக்கில்லாமலேயே தென்கோடி ஆப்பிரிக்காவில் அபிசீனியாவிலும் கீழ்க்தோடி ஆசியாவில் சீனாவிலும் தென்கோடி இந்தியாவில் தமிழ் நாட்டிலும் அமெரிக்காவில் பெருவிலும் தனித்து உயர்நாகரிகம் அடைந்துள்ளனர் என்பதைக் காணலாம். 

   திராவிடரும் பிற ஆரியரல்லாதாரும் பதினாயிரம் ஆண்டுகளாக இவ்வளவு உயர் நாகரிக நிலையை அடைந்திருக்தாராயினும், ஆரியர் வருமுன்னேயே அவர்கள் வளர்ச்சியற்று அழியும் நிலையை அடைந்துவிட்டனர் என்று காணலாம். நாகரிகம் இதற்குச் சான்று பகரும். இந்நிலைக்குக் காரணம் என்ன? நாகரிகம் அவர்களிடையே ஒரே நிலையில் சரிநிகராக வளர்ச்சியடையாததால் தொழில் பாகுபாட்டில் நாகரிகப்படியில் ஏற்றத் தாழ்வு உடைய பல வேறுவகுப்புகள் ஏற்பட்டு ஒற்றுமை குலைந்தது இதற்கான தலையான காரணம். இன்னொன்று வாழ்க்கை முறையில் கோயிலும் கோயில் குருமாரும் அடைந்த தலைமை நிலையும், அறிவு இவரை அண்டிய ஒரு சிறு அறிஞர் குழுவில் சென்றமைந்ததும் ஆகும், ஒவ்வொரு வகுப்பினரும் தத்தம் வகுப்பு நலம் பேணியதால் இனநலம், நாட்டுநலம் மறந்தனர். அறிஞர்குழுவோ தம் நலமட்டும் பேணிவந்த குழுவினருடன் கலந்து தம் இனத்தைத் தாழ்த்தி உயர்வடையவும் பிற இனத்தவராகத் தம்மைக் கொள்ளவும் தலைப்பட்டது. திராவிடர் வாழ்க்கை முறையில் இதனை இன்றளவும் காணலாம். சீனரிடையே