2. ஆட்சி வகைகள் கால நிலைக்கும் இடவேற்றுமைக்கும் ஏற்ப உலகில் எத்துணையோ ஆட்சி வகைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும் பொதுப்படையாக அவற்றை முடிஆட்சி என்றும் குடியாட்சி யென்றும் இருபெரும் பிரிவுகளுட் படுத்தலாம். இவற்றுள் முடியாட்சி என்பது ஆட்சியின் தலைமையில் ஒர் அரசனைக் கொண்டது. இவ்வரசன் பெரும்பாலும் முன்னைய அரசர் வழிவந்தவனாகவே யிருப்பான். ஆயினும் பிறப்புரிமை ஒன்றினால் மட்டுமே அவன் அரசனாய் விடுவான் என்று சொல்வதற்கில்லை. குடிகள் அவனை ஏற்றதற்கறிகுறியாக அவனுக்கு முடி சூட்டி அரசிருக்கை யளிக்கவேண்டும். பிறப்புரிமை உடைய வரும் பிறப்புரிமை அற்றவரும் கூடச் சூழ்ச்சியாலோ படை வலியாலோ அரசாட்சியைக் கைக்கொண்டு தம் உரிமையை மக்கள்மீது திணிப்பதுண்டு. சில சமயம் மக்களாக ஓர் அரசனிறந்தபின் தாம் விரும்பிய ஒருவனை அரசனாகத் தேர்ந்தெடுப்பதும் விரும்பாத அரசனை எதிர்த்துக் கிளர்ச்சிசெய்து வீழ்த்துவதும் உண்டு. முடியரசர் முன்னைய குலபதிகளின் வழிவந்தவர் என்று முன் பிரிவில் கூறியிருக்கிறோம். குலபதியாகவும் சிறு அரசனாவும் இருக்கும் போது அரசுரிமையை முற்றிலும் அவர்கள் தாங்களே நேர்நின்று செயலாற்றினர். நாடு விரிய விரியப் படைத்தலைவர், அமைச்சர், பணியாளர், வழக்குத்தலைவர், ஊர், நகர, வட்டத் தலைவர் |