முதலிய பணியாளர்களை அமர்த்தி அவர்கள் துணை கொண்டு முடியரசன் ஆண்டான். ஆயினும் அவன் ஆட்சி எல்லார் மீதும் ஆணை செலுத்திற்று. இங்ஙனம் அரசனே தன் விருப்பப்படி தங்கு தடையின்றி ஆளும் உரிமை உடையவனாயிருந்தால் அம் முடியாட்சி வல்ல சாட்சி (despotism) என்று பெயர் பெறும். கிரேக்கர் இத்தகைய ஆட்சியைக் குறிக்க வழங்கிய சொல்லே (Tyranny) இப்போது ஆங்கிலமொழி்யில் கொடுங் கோன்மையைக் குறிக்கிறது. அரசன் அமைச்சர் துணை கூட இல்லாமலோ அவர்களுக்குக் கட்டுப்படாமலோ நி்ன்று, சட்டங்கள், குடிகளின் விருப்பம் ஆகிய எவற்றையும் பாராமல் தான் வைத்தது சட்டம் என ஆண்டால் அது கடுங்கோன்மையாகும். கடுங்கோலர் குடிகள் விருப்பம் பாராவிட்டாலும் அவர்கள் நன்மையைப் பேணுபவராயிருக்கக்கூடம். அப்போது அது நற்கடுங்கோன்மை (Benevolent Depotism) ஆகும். அவர் தீயவராய்த் தீமை செய்தால் அது கொடுங் கோன்மையாகிவிடும். அரசன் குடிமக்கள் நலங்களையும் விருப்பங்களையும் பேணிய அமைச்சர்கட்கும் நாட்டுச் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு ஆண்டாலும், மக்களுக்கு உரிமைத் தாள்கள் வழங்கி அவற்றை மீறாது ஆண்டாலும், அவ் ஆட்சி வரையறைப்பட்ட முடியாட்சி யாகும் குடிமக்களுக்குப் பொறுப்புடைய சட்டமன்றமும் அதற்குப் பொறுப்புடைய அமைச்சரும் அவ்வமைச்சருக்குக் கட்டுப்பட்ட அரசனும் ஆட்சிமுறைய |