அரசர் குடும்பத்தில் அரசுரிமை பெரும்பாலும் ஆடவர் வழியிலேயே வந்திருக்கிறது. பிரஞ்சு நாட்டில் பெண்களுக்கு அரசுரிமை இல்லை என்று ஒரு சட்டம் ஏற்பட்டிருந்தது. ஆடவர் வழியில் எவ்வளவு தொலைவு சென்றாலும் உரிமையுடையவரிராவிட்டால் கூட ஆவ்வுரிமைக்கு அண்மையிலுள்ள பெண் அரசியாவதில்லை. அவள் வழியில் வந்த அடுத்த ஆடவனே அரசனாவான். ஆனால் ஆங்கில நாட்டிலும் பிறநாடுகளிலும் உரிமை பெற்ற ஆடவர் இல்லாதபோது பெண்ணும் உரிமை பெற்று ஆளக்கூடும். எலிசபெத், ஆன், மேரியர் இருவர், விக்டோரியா ஆகியவர்கள் இங்ஙனம் ஆண்டுள்ளனர். இந்தியாவிலும் கணவனிறந்தபின் நாடாண்ட காரிகையர் பலர் உளர், வடநாட்டில் ரெசியா, சான்சி முதலியவர்களும், தமிழ்நாட்டில் அல்லி அரசியும், மங்கம்மை அரசியும் இத்துறையில் பேர்போனவர்கள். பண்டைய பாண்டியன் வழி அல்லி அரசி காலத்தில் பெண் அரசுரிமை உடையதாயிருந்தது என்று கூட அந்நாளைய கிரேக்க ஆசிரியர் குறித்திருக்கின்றனர். அது எங்ஙனமாயினும் இன்று மலையாள நாட்டில் திருவாங்கூரில் ஆடவரேதான் அரசராயினும் அவர்கள் அரசுரிமை பெண்வழியில் (மருமக்கள் வழியில்) வருகிறது. அண்மைவரை குமடிகள் பொருளுரிமை கூட இவ்வழியிலேயே அங்கு அமைந்திருந்தது. ஆங்கில நாட்டில் உயர்குடியில் பொருளுரிமைகூட அரசுரிமை போல மூத்த ஆடவர்க்கு மட்டும் உரியதாயிருந்து வருகிறது. மன்னனில்லா ஆட்சி ஒழங்கான ஆட்சியாயிராது பாழாட்சியே (Anarchy) என்று அந்நாளைய மக்கள் கருதினர். பழங்காப்பிய ஆசிரியர் மன்னனில்லா நாட்டைக் கணவனில்லாக் காரிகைக்கும், கண்ணில்லா |