முகத்துக்கும், தாமரையில்லாப் பொய்கைக்கும், வெண்கதிரும் தண்கதிரும் இல்லா வானத்துக்கும் ஒப்பிட்டு கூறினர். ஆயினும் வடஇந்தியாவிலும், கிரீசிலும் ரோமிலும் பண்டைக் காலத்திலேயே இத்தகைய ஆட்சி இருந்தது உண்மை. ஆகவே ஆட்சி ஒழுங்கில்லாத நாடுதான் பாழாட்சி யுடையதென்றும், மன்னனில்லா ஆட்சி பாழாட்சி யன்று என்றும் காணலாம். தற்கால அறிஞர் மன்னனில்லா ஆட்சி முறையைக் குடியாட்சி (Republic) என்கின்றனர். முடியாட்சியைப் போலவே குடியாட்சியும் முதன் முதலில் குலத்தலைவர் நிலையிலிருந்தே தோற்றியிருக்கக் கூடும். குடிகள் அல்லது குலங்கள் ஒன்று பட்டபோது ஒரு குடித்தலைவன் அல்லது குலத்தலைவன் மற்ற தலைவர்களை வென்றடக்கினால் முடியாட்சி ஏற்படும் சில சமயம் ஒரு தலைவன் இங்ஙனம் செய்யமுடியாமல் போகலாம். அப்போது பல தலைவர்கள் ஒன்றுபட்டோ அல்லது தலைமையான ஒரு குடியினர் மட்டிலுமோ தலைமை தாங்கலாம். அத்தகைய தறுவாய்களில் முடியாட்சியினிடமாகக் குடியாட்சி தோன்றும். இந்தியாவில் கௌதம புத்தர் காலத்தில் சாக்கியர் குடியிலும் குப்தர் ஆட்சித் தொடக்கத்தில் லிச்சாவிக் குடியிலும் இத்ததைய குடியாட்சி முறை யிருந்ததாகத் தெரிகிறது. அலக்சாண்டர் காலம்வரை கிரேக்கர் நகரங்கள் பல இத்தகைய குடியாட்சி வகைகளை யுடையவையாயிருந்தன. ரோம் சீசர்காலம்வரை நெடுங்காலம் குடியாட்சி உடையதாயிருந்தது. ஒரு தனிமனிதன் கையில் ஆட்சித்தலைமை போய்விடக் கூடாது என்ற எண்ணமே குடியாட்சி ஏற்படக் |