பக்கம் எண் :

குடியாட்சி27

காரணம். ஆனால் ஸ்பார்ட்டாவில் இக்கருத்துடன் ஒரு புதுவகை முறை கையாளப்பட்டது. அவர்கள் ஒர் அரசனுக்கு மாறாக இரண்டு அரசர் ஏற்படுத்தி ஒருவர் உரிமையை பெற்றொருவர் உரிமையால் தடுத்து நிறுத்த வகைதேடினர். இப்புதுமை வாய்ந்த ஆட்சியை நாம் இணைமுடியாட்சி என்னலாம்.

   குலமுதல்வனுக்கு மாறாகப் பல குலமுதல்வரோ ஒரு குடியினரோ தலைமை நிலைபெற்ற குடியாட்சி, குழுவாட்சி என்னப்படும் (Oligarchy) தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பாராக மட்டும் அமைந்தால் அது உயர்குடி ஆட்சியாம் (aristocracy) வகுப்பு, பிறப்புப் பற்றியது (சாதி) ஆனால் அது உயர்குல ஆட்சி (aristocracy by birth) என்றும், நாகரிகமுடைய வகுப்பினராட்சியானால் மேன்மக்களாட்சி (aristocracy by merit) என்றும், முனிவர், சமயத்தலைவர் ஆகியவர் ஆண்டால் முனிவராட்சி (Hagiocracy) என்றும்--முதன்மக்கள் ஆட்சி என்றும் பெயர் பெறும், சில இடங்களில் ஆட்சியுரிமையாரிடமும் இல்லாமல் தெய்வத்தின் பெயரால் ஆட்சி நடைபெறுவதாகக் கூடக் கூறப்படுவதுண்டு. திருவாங்கூரில் இக்கருத்துடனேயே நாட்டுக் காசுகளில் அந்நாட்டுத் தலைமைக் கோவிலின் தெய்வமாகிய உந்தித்தாமரையானின் (பத்மநாபரின்) குறியீடுகளான சங்கு சக்கரம் மட்டுமே குறிக்கப் படுவதுடன் அரசரும் தம்மைப் பத்மநாபனடியார் என்று குறித்துக் கொள்கின்றனர். இதனை ஒர் ஆட்சிமுறையாகக் கொண்டால் தெய்வ ஆட்சி (Theocracy) என்று கூறவேண்டும்.

   இன்னும் இதேமுறையில் அறிஞர் ஆட்சி, செல்வர் ஆட்சி, (Timocracy) ஆட்சி, முறையிற் பயிற்சி பெற்ற