பக்கம் எண் :

28குடியாட்சி

வல்லுநர் ஆட்சி (Bureaucracy) என்று குழுவாட்சியைப் பலவாறாக வகுத்துக் கூறலாம். ஒரு வகுப்புக்கு அல்லது தலைவனுக்குக்கீழ் இன்னொரு வகுப்பு அல்லது தலைவன், அதற்கு அல்லது அவனுக்குக்கீழ் அதற்கடுத்த வகுப்பு அல்லது தலைவன் என்றிப்படி, ஏணிபோல் ஆட்சி உரிமை இறங்கி வருமானால் அதனைப் படிமுறை ஆட்சி (Hierarchy) என்பர். ஐரோப்பாவில் நில உரிமை இ்ங்ஙனம் படி முறையில் அரசன் முதல் உழவன் வரை பரந்திருந்தது. அதனைப் படிமுறை உரிமை (feudalism) என்கிறோம் இந்தியாவில் பிரிட்ஷ் ஆட்சியைக் குறைகூறுவார் அதனை வல்லுநர் ஆட்சி, படிமுறை ஆட்சி என்று சொல்வதுண்டு.

   குடியாட்சியுட்பட்ட எல்லாமக்களுக்குமே ஆட்சி உரிமை அமைந்திருந்தால் அத்தகைய ஆட்சிக்குப் பொது குடியாட்சி (democracy) என்பது பெயர். குடியாட்சி முறைகளுள் இதுவே சிறந்ததெனக் கொள்ளப்படுகிறது. பூ எனப்படுவது பொறிவாழ் பூவாகிய தாமரையே என்று கூறுவதுபோல் இதனையே குடியாட்சி என்று சிறப்பித்துக் குறிப்பர். இந்நூலின் பெயரில் கண்ட குடியாட்சி என்னும் தொடர் இப்பொருளிலேயே வழங்கப்படுகிறது. கொள்கையளவில்தான் உண்மையில் ஒராட்சி எல்லார் உரிமையையும் பேணுவதாயிருக்க முடியும். ஒரு சிற்றூரில் கூட எல்லாமக்களும் வந்து ஆட்சி உரிமையை நேரடியாக நடத்தல் முடியாது. ஆயினும் பண்டைய கிரேக்க நாட்டில் அதென்சில் (Athens) எல்லாமக்களும் வந்து ஒரிடத்தில் கூடிப் பொதுக் காரியங்களை நடத்தினராம். அகவே கருத்தியல்வரையில் அதென்சின் அந்நானைய அரசியலே நிறைந்த பொதுக்குடியாட்சி’ (Perfect Democracy) எனப் கூறப்படுகிறது. ஆயினும் உண்மையில்