அவ்வாட்சியில் ஆரியராகிய கிரேக்கருக்கு மட்டும் தான் அவ்வகையுரிமையும் உண்டு. கிரேக்கரினும் பன்மடங்கு தொகையுள்ள பழங்குடி மக்கள் அங்கே அடிமைகளாக வேலை செய்தனர். அவர்களைக் கிரேக்க அறிஞர் கூட மனிதராகக் கருதவில்லை. யாதலினால் தான் அதனைப் பொதுக் குடியாட்சி என்றனர். அடிமைகளின் உரிமையை விலக்கிப் பார்த்தால் பொதுக் குடியாட்சியின் தன்மை கருத்தளவில் அந்நகராட்சியில் நிறைவுற்றிருந்தது என்பது உண்மையே. நகரும் நகர்சார்ந்த சேரிகளும் நகராட்சியில் உட்பட்டிருக்கும் காலம்வரை இவ்வாட்சி குடியாட்சி முறையில் நடந்தது. ஆயினும் அதேனியர் கடல்கடந்த பல தீவுகளிலும் நாட்டுப் பகுதிகளிலும் தம் கொடியைப் பரப்பியபோது அவ்விடங்களிலுள்ள மக்கள் ஆட்சியுரிமையில் சரி நிகர்பங்கு கொள்ள முடியவில்லை. ஐரோப்பாவில் இத்தகைய நிலையைச் சமாளிப்பதற்குத்தான் பெயராண்மையும் (Representation) தேர்தல் முறையும் எழுந்தன. கிரேக்க ரோம அரசியலில் இம்முறை எழவில்லை. பெயராண்மையும் தேர்தல் முறையும் உடைய குடியாட்சியே பொறுப்புடைய குடியாட்சி அல்லது உண்மையான குடியாட்சி என்று இன்று கொள்ளப்படுகிறது. இவ்வாட்சியின் சிறப்பு அது எல்லாவகையிலும் நிறைவுடையது என்பதன்று ; நிறைவுடைய ஆட்சியை வகுக்க உதவிதந்து, வளர்ச்சிக் கிடம்தரும் வகையில் நெகிழ்ச்சியுடையது என்பதே. பொறுப்பாட்சி ஏற்பட்ட நாடுகளில் படிப்படியாகத் தேர்தலுரிமையும் அமைச்சர்குழுப் பொறுப்பும் வளர்ச்சியடைந்து வருகின்றன. தொடக்கத்தில் பழைய குலமுதல்வர். பெருங்குடியனிர் ஆகியவர்கள் வழியில் வந்து செல்வரும் வல்லுநரும் தேர்தலுரிமை பெற் |