றிருந்தனர். பின் பிறரும் செல்வ நிலை எய்தித் தேர்தலுரிமை பெறத்தொடங்கினர். இறுதியாக அனைவரும் தேர்தலுரிமை பெற்றனர். ஆடவருடன் சரிநிகராய்ப் பெண்டிரும், சொத்துரிமை உடையவருடன் சரிநிகராக உழைப்பாளிகளும் உரிமைபெற்று வருவது இந்நாளில்தான், பழைய அரசியலறிஞர் எல்லா மக்களும்--ஆடவர், பெண்டிர் அனைவரும் தேர்தலுரிமை பெற்று அமைத்து குடியாட்சியையே முழுக் குடியாட்சியென ஏற்றமைவுற்றனர். ஆனால் அரசியலுரிமைகள் பெறுவதனால் மட்டும் எல்லாருக்கும் சரிநிகருரிமை ஏற்பட்டு விடவில்லை என்பதைப் பல அறிஞர் கண்டனர். வாழ்வியல் ஒப்பந்தம் அறிஞரே இதனை முதலிற் கண்டுரைத்தவர்கள். மக்களிடையே உயர்வு தாழ்வுகள் ஏற்பட்டிருப்பது அரசியல் சமயம் ஆகியவற்றில் முன் தலைமை தாங்கிய வகுப்பினர் நடுநிலைநெறியின்றி ஆட்சி செய்ததன் பயனேயென்றும் எல்லாருக்கும் இயற்கை வாழ்வின்படி சரிநிகர் உரிமை உண்டு என்றும் அவர்கள் கூறினர். வாழ்வியல் ஒப்பந்த அறிஞர் வழிவந்த வாழ்வியல் சீர்திருத்த அறிஞர் (Socialitts) முதலில் அரசியலில் அனைவருக்கும் உரிமை கிடைத்தால் வாழ்வில் சரிநிகர் நிலைமை ஏற்பட்டு விடும் என்று கருதினர். ஆனால் நடைமுறையில் தேர்தல் உரிமை ஒரு சொக்கட்டான் ஆட்டமாகவே இருப்பது கண்கூடு. முன்தம் தேர்தலுரிமையால் மக்களை ஆட்டி வைத்த பழைய செல்வர் இப்போது தம் உயர் நிலையைப் பயன்படுத்தி வேறுவகையில் தேர்தலுரிமையையே ஆட் கொண்டு விட்டனர் என்பதை அவர்கள் கண்டனர். முழுக்குடியாட்சி நிலவுவதாகக் கூறப்படும் இங்கிலாந்தில் இன்னும் பெருநிலக் கிழவரும் பெருந்தொழில் முதலாளி |