களுமான விரல்விட் டெண்ணக்கூடிய ஒரு சிலரே ஆட்சியுரிமையை முற்றிலும் தம் வயப்படுத்தியிருக்கின்றனர் என்றும், பிரான்சில் ஒருசில பத்துக்குடிகளும், அமெரிக்காவில் ஒருசில நூறுகுடிகளும் தாம், உண்மையில் ஆட்சியை நடத்துகின்றனவென்றும் கூறப்படுகிறது. எனவேதான் குடியாட்சி கொக்கரித்தாடும் இந்நாடுகளி்லும் கோடி குவித்த மட்டற்ற செல்வ மாளிகைகளுடன் கூடப் பல குடிகள் அரையாடையுடன் வாழும் குடில்களும் இடம்பெற்றுள்ளன. எனவே அரசியல் சரிஒப்பு ஏற்பட்டால் போதாது; தனி உரிமைகள், தனி உடைமைகள் அற்றுப்போனால் தான் உண்மையில் சரிநிகர் நிலை ஏற்படும் என்று பல அறிஞர் கண்டனர். மற்ற வகை உடைமைகளை ஆண்டவரை விடத் தொழில் வகையில் பலர் உழைப்பை ஆண்ட முதலாளி வகுப்பினர் இப் புதுப்போக்கை எதிர்த்தனர். எனவே முடியாட்சி குடியாட்சி முதலிய எல்லாப் பழைய அரசியல் வகைகளும் முதலாளி முறையின் பல்வகை வேறுபாடுகளே என்றும் தொழிலாளிகள் இப்பெரு முதலாளிகளை எதிர்த்துத் தம் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டுமானால் பொது உடைமை ஆட்சி ஏற்பட வேண்டும் என்றும் நாளடைவில் அறிஞர் கருதினர். செர்மானியப் பேரறிஞராகிய கார்ல்மார்க்ஸ் மனித நாகரிதத்தின் போக்கு முற்றிலும் முதலாளி தொழிலாளி என்ற இரு வகுப்பினரின் போராட்டமே என எடுத்துக்காட்டித் தொழிலாளிகள் இந்நிலையை உணர்ந்தாலல்லாமல் தம் வினைக்கு (விதிக்கு)த் தாம் தலைவராக முடியாது என்று காட்டினர். அவர் வகுத்த ஆட்சி முறையே பொதுப்படப் பொதுஉடைமை (Communism) |