தோல்வியடையவோ காரணமில்லை. படைவலியால் ஒர் அரசன் இன்னோரரசனை அடக்கிச் சிற்றரசனாக்கவோ, அவன் நாட்டைக் கவர்ந்து அவனை அரசுரிமையிலிருந்து வீழ்த்தவோ செய்வது முடியாது. மேலும் கடவுளே ஏற்படுத்திய அரசன் அதே கடவுள் ஏற்படுத்திய சமயத் தலைவர்களுடன் அவ்வப்போது முரண்படுவானேன்? தெய்வம் சமயத்தையோ சமயத்லைவர்களையோ ஏற்படுத்திய தென்பதும் மக்களுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. இடந்தோறும் காலம் தோறும் வேறு சமயங்களும் சமய உட்பிரிவுகளும் தோன்றித் தெய்வத்தின்பேரால் தலைவர்கள் பூசலிட்டதை அவர்கள் கண்டனர். எனவே பகுத்த றிவாராய்ச்சியில் முனைந்த அறிஞர் தெய்விகக் கொள்கையை உதறித்தள்ளினார்கள். அதனிடமாக அவர்கள் வாழ்வியல் ஒப்பந்தக்கொள்கை என்ற ஒரு புதுக்கொள்கையை வகுத்தார்கள். உலகில் மனிதன் தோன்றியது உலகுதோன்றிய காலத்திற்கு நெடுநாள் பிற்பட்டே என்று அறிவியல் விளக்க அறிஞர் கூறினர். மனிதன் தோன்றியபோது இன்றளவு நாகரிகநிலை உடனடியாகத் தோன்றியிருக்க முடியாது. மனிதனுக்குக் கீழ்ப்பட்ட விலுங்குகளிடையேகூட சில தனித்து வாழ்கின்றன. சில இணை இணையாகக் கூடி வாழ்கின்றன. ஒரு சிலவே கூட்டங்கூட்டமாக வாழ்கின்றன. கீ்ழ்ப்பட்ட விலங்குகள் தம் உடல்வலியை நம்பிப் போராடுகின்றன. உயர்படியிலுள்ளவை படிப் படியாகக் கருவிகளை வழங்கியும் சிறிதுசிறிதாக அறிவைப் பயன்படுத்தியும் வாழ்க்கைப் போராட்டத்தைத் திறம்பட பயன்படுத்தியும் வாழ்க்கைப் போராட்டத்தைத் திறம்பட நடத்துகின்றன. மனிதனும் இவற்றைப்போலவே படிப் |