பக்கம் எண் :

4குடியாட்சி

படியாகக் கருவிகளை வழங்கும் முறையிலும், கூடிவாழும் முறையிலும், உடல்வலியினிடமாக அறிவைப் பயன்படுத்தும் முறையிலும் மேம்பட்டு இறுதியிலேயே கூட்டுறவு வாழ்க்கையிலும் அதன் முதிர்ச்சியாகிய அரசியல் வாழ்க்கையிலும் கருத்துச் செலுத்தியிருக்கவேண்டும் என்று அவர்கள் ஆராய்ந்து முடிவுகட்டினர்.

   கூடி வாழத்தொடங்கிய மனிதன் அக் கூட்டுவாழ்வுக்கேற்ற சில பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை ஓழுங்குகளையும் கைக்கொண்டிருக்கவேண்டும். பெரும்பாலோரும் இவற்றை இயல்பிலேயே கைக்கொண்டொழுகுவர். ஒழுகாதவிடத்தில் அங்ஙனம் ஒழுகாதவரைப் பொதுமக்கள் விலக்கியும் ஒறுத்தும் வந்தனர். ஆயினும் தனிப்பட்ட ஒரு மனிதன் அவற்றைத் தெரிந்தோ தெரியாமலோ மீறியவிடத்தில் மற்றவர்கள் கூட்டாகச் சேர்ந்து அவனைக் கண்டிக்க ஒரு கூட்டு அவை ஏற்படுத்தியிருப்பர், கூட்டத்தில் அறிவாலும் ஆற்றலாலும் சிற்ப்புப்பெற்றவர்கள் இதில் தலைமையுடையவரா யிருந்திருப்பர். இவர்களிடையிலும் மாறுபாடுகள் ஏற்படுங்காலத்திால் எல்லாருடைய நம்பிக்கையையும் கீழ்ப்படிதலையும் பெற்ற ஒருவன் அவர்கள் தலைமையில் நின்று ஒழுங்கு நிறுத்தி அவர்களை ஆள முற்பட்டிருப்பான் என்று எண்ணுவது தவறன்று.

   இத்தகைய தலைவனொருவனை மக்கள் கண்டு தம்மிடையே ஒழுங்கை நிலைநிறுத்தும்படி அனைவரும் கேட்டுக்கொண்டனர் என்றும், பொதுநலத்தை முன்னிட்டுத் தம் தனி உரிமைகளை ஒரளவு அவன்கையில் ஒப்படைக்க ஒப்புக்கொண்டனர் என்றும் மேற்கூறிய அறிஞர் கூறினர்.