உலகத் தோற்றம், மக்கள் தோற்றம், நாகரிகத் தோற்றம் ஆகியவற்றுக்கு மக்கள் அரசியல் தோற்றம் பிற்பட்டதாகவே இருந்திருக்க வேண்டும் என்று மக்கட் கூட்ட ஒப்பந்த அறிஞர் கூறுவதை வரலாற்றாராய்ச்சியாளர் ஒத்துக்கொள்கி்ன்றனர். அதுமட்டுமன்று, பழங்கால மனிதனைப் பற்றி நாம் அறிந்தவரையில் அவன் தொடக்கமுதலே இன்று போல் நாடு நகரமும் ஊரும் அமைத்து உழவும் வாணிகமும் கைத்தொழிலும் பேணி வாழ்ந்தான் என்பது இல்லை. அவன் உண்மையில் கடலோரத்திலோ ஆற்றோரத்திலோ கூட வாழ்ந்ததாக எண்ண இடமில்லை. காடும் மலைகளுமே அவன் முதல் உறைவிடங்கள் ஆகும். மரநிழலும் அதனிலும் முற்பட்டு மலைக் குகைகளுமே அவன் தங்கிய வீடுகளாயிருந்தன. பயிரிடுவாரின்றிக் காய்த்துப் பழுத்து விழுந்த காய்கனிகளும் சருகுகளும் காட்டு விலங்குகள், பறவைகள், உயிர்வகைகள் ஆகியவற்றின் இறைச்சியுமே அவன் உணவு, இவற்றைக் கொல்லக் கல்லையும் கற்கருவிகளையும் கோலையும் கோலாலான வி்ல், வேல் முதலியவற்றையும் அவன் கையாண்டான். முதலில் சமையல் செய்யாதும், பின் தீயின் பயனறிந்து அவற்றைச் சயமைத்தும் அவன் உண்டான் இக்காலங்களை வரலாற்றாசிரியர் பழங்கற்காலம் என்றும், புதுக்கற்காலம் என்றும் பகுத்துக் கூறுவர். கற்கருவிகள் கருவிகளாகவே யிராமல் தெளிந்த உருவற்ற மொட்டை மழுக்கைக் கற்களாயிருந்த தாலம் பழங் கற்காலம். அவை அரை குறையாகவேனும் செப்பம் செய்யப்பட்ட காலம் புதுக் கற்காலம் ஆகும். மனிதன் செம்பு, பித்தளை, வெண்கலம், முதலியவற்றையும் |