எனவே ஆட்சிமுறை வரலாறு வகையில் கீழ்நாடுகளின் வரலாறுகளைவிட, கிரேக் கரோம நாடுகளின் வரலாறு பயனுடையவை. ஆயினும் கிரேக்க நாகரிகம் நீங்கலாக மற்றவை குடியாட்சியின் தோற்ற வகையில் பயன்படமாட்டா. கிரேக்க நாட்டின் வரலாறு உலகுக்கு ஒரு முன் மாதிரியாயினும் வளர்ச்சி முடிந்துவிட்ட ஒரு தனி வரலாறு. பழைய நாகரிக உலகிற்கும் புதிய நாகரிக உலகிற்கும் அரசியல் வகையில் பாலம் போன்றமைந்திருப்பது பிரிட்டன். அடுத்தபடி இன்றைய உலகிற்கும் வருங்கால உலகிற்கும் இடையேயுள்ள ஒரு பாலமாய்யமைந்திருப்பது உருசியா என்று கூறலாம். 3. பழங்கால ஆட்சி வகைகள் உலகில் முதல் முதல் ஏற்பட்ட ஆட்சிமுறை முடியாட்சியே யென்றும் இது குலமுதல்வன் ஆட்சியினின்று தோன்றியது என்றும் மேலே கூறினோம். குலமுதல்வன் ஆட்சி எப்போது முடியாட்சியாக மாறிற்று என்று வரலாற் றாராய்ச்சியால் துணிந்து கூற முடியவில்லை. ஆரியரிடை இந்தியாவிற்குள் வந்தபின்தான் குலமுதல்வனாட்சி முடியாட்சியாக மாறிற்று என்றும் கண்டோம். கிரீசிலும் கி. மு. ஆயிரத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படும் தீசியஸ்தான் குலமுதல்வன் நிலையிலிருந்து முடியரசை நிறுவிப் புகழ்பெற்றவன் என்றுஎண்ணப்படுகிறது. ரோமரிடையே மிகப்பழைய காலத்திலிருந்தே குலமுதல்வர் முடியரசராக விளங்கினர் என்று தெரிகிறது. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் தான் இ்ங்கே எக்காரணத்தாலோ முடியரசு வீழச்சியடைந்து குடியரசு ஏற்பட்டது. கி. மு. முதல் நூற்றாண்டில் பழையபடி குடியரசு வீழ்ச்சி யடைந்து |