யரும் ஒரு பேரரசாட்சியுட்பட்டனர். இறுதியில் கமால் பாஷாவால் துருக்கி பிரிக்கப்பட்ட பின் மீண்டும் குல முதல்வர் ஆட்சிமுறையில் பட்ட அரபிநாட்டை நம் நாளில் இப்னுசுஊதியே ஒற்றுமைப்படுத்தி வருகிறார். எகிப்து, பாபிலோன், திராவிட இந்தியா ஆகிய இடங்களில் மன்னராட்சி இவற்றினும் பழமையுடையனவாதலால் அவற்றின் முதல் நிலைபற்றி எத்தகைய குறிப்பும் கிட்டவில்லை. வரலாற்று மூலம் திராவிடர் பழமைபற்றி மிகுதியாக அறிய முடியவில்லையாயினும் அரப்பா மொகஞ்சதரோப் புதைபொருளாராய்ச்சியால் அது எகிப்தியர் முதலிய செமித்தியருடன் தொடர்புடையதும் ஒத்த கலாத்ததும் ஆகும் என்பது புலப்படுகின்றது. பலவகைகளில் பண்டைக்காலச் சிந்து மக்கள் செமித்தியரினும் மேம்பட்ட நாகரிக முடையவர்களாகவே யிருந்தனர் என்று வரலாற்றிஞர்கள் கூறுகிறார்கள். இதனுடன் சேர்த்துப் பழைய மரபுரைகளைக் கவனித்தால் திராவிடநாடு இவற்றி்லும் பழமையுடையதே என்பது விளங்கும். செமித்தியரில் ஆரியருடன் ஒத்த பழமையுடையவர் ஏபிரேயர். அராபியர் இவர் வழி வந்தவர் எனவே கூறிக்கொள்கின்றனர். இவ் ஏபிரேயர் தாம் எகி்ப்தியர் இனத்தவர் என்றும் அவர்கள் நாட்டினின்று அவர்கள் அரசனாகிய பரோவாவின் கொடுமை பொறாது வந்தவர்களே என்றும் கூறுகின்றனர். ஆனால் இவ் எகிப்தியரோ வெனில்தாம் இந்தியாவினின்று போந்தவர் எனவே உரைத்தனர். ஆக, செமித்தியர் திராவிடரின் வழிவந்த கிளையினர் என்று கொள்வது பொருத்தமற்றதன்று. மேல் ஆராய்ச்சிகள் இதனை இன்னும் தெளிவுபடுத்தக்கூடும். இந் நாடுகள் இடையே வழங்கிய அன்னை வணக்கம், ஊர் என்ற இடம் |