பெயர், ஆனின் வணக்கம், பெண்கள் வீரமும் உயர்வு ஆகியவைகள் இவ்வொற்றுமையை வலியுறுத்தத் தக்க சான்றுகளாகும். இவ்வெகிப்தியரிடையேயும் பிற மக்களிடையேயும் முதல் மன்னர்பெயர் மெனாஸ் என்று மரபாக வழங்கி வருகிறது. இந்தியரிடையேயும் முதல் மன்னர் மனு என்றும், மக்களிடையே ஒப்புரவு குறைந்தகாலத்து அவர்கள் இறைவனை வேண்டி அவரை அரசராகப் பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இம்மனுவே பெருவெள்ளகாலத்தில் மக்கள் வகுப்பை அழியாது காத்தவர் என்றும் குறிக்கப்படுகிறது. விவிலிய நூலிலும் செமித்தியரிடையும் காணப்படும் இக்கதை கிரேக்கர், ரோமர், செர்மானியர் முதலிய தொலைதூர ஆரிய வகுப்பினரிடம் காணப்பெறாது இந்தியரிடையே மட்டும் காணப்படுவதிலிருந்து இக்கதை திராவிடச் சார்பானதேயல்லாமல் ஆரியச் சார்பானதன்று என்று துணியலாம். இதற்குப் புராணங்களே சான்றும் பகர்கின்றன. இம் முதலரசனாகிய மனுவே திராவிட நாட்டரசன் பிரகத்தன் எனவும் அவன் படகுடன் தங்கிய இடமும் திராவிட நாட்டின் மலைகளுள் ஒன்று எனவும் அவை கூறுகின்றன. இம்மன்னன் பாண்டிநாட்டுத் தமிழ் மன்னன் ஒருவன் என்றும், தங்கியமலை மலையமலை ஆகிய பொதிகை என்றும் அவன் பெருவெள்ளத்தினின்றும் காத்த முதன் மனிதவகுப்புத் தமிழர் அல்லது பழந் திராவிடரே என்றும் கொள்ளுதல் கூடு்ம். அப்படியாயின் மனு அ்ல்லது பிரகத்தன் திராவிடர்களிடையே முதன்மன்னன் என்று கொள்ள இடம் ஏற்படலாம். ஆயினும் புராணத்தின் போக்கிலிருந்து அவன், வெள்ளத்தால் பழைய உலகு அழிந் |