பக்கம் எண் :

குடியாட்சி37

தபின் ஏற்பட்ட புதிய உலகின் முதல் அரசனாகக் கூறப்படுவதாகத் தோற்றுகின்றதே றன்றி உலகிலேயே முதல் அரசன் என்று கூறப்படுவதாகக் காணப்படவி்லை. இப்பழங்கதையையன்றித் திராவிடரிடையே மன்னராட்சியின் தொடக்கம் பற்றிய எத்தகைய குறிப்பும் நமக்குக் கிடைக்கவில்லை. அதன் காலமும் நம் ஆராய்ச்சிக்குட் படாததாயிருக்கின்றது.

   குலமுதல்வனிலையிலிருந்து முடியாட்சி தோன்றியது போலவே குடியாட்சியும் சில இடங்களில் தோற்றின என்று மேலே குறிப்பிட்டிருக்கிறோம்.

   இந்தியாவில் கி, மு, ஏழாம் நூற்றாண்டில் இத்தகைய குடியாட்சிகள் பல இருந்தன. கி. மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடில்யரின் அர்த்தசாத்திரத்திலும் சுக்கிரன் எழுதிய சுக்கிர நீதியிலும் இத்தகைய குழுவாட்சிகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் கி. பி. 4-ம் நூற்றாண்டில் குப்தர் வழியின் முதல் அரசனான சந்திரகுப்தன் லிச்சாவி என்ற குழுவாட்சி மக்களின் ஆட்சிக் குழுவினரிடையே பிறந்த இளவரசியை மணந்ததன் பயனாகவே ஆற்றல் மிக்கவனானான் என்று கூறப்படுகிறது.

   குழுவாட்சி முதலில் குடிச்சார்பிலேதான் எழுந்ததாயினும் நாளடைவில் செல்வத்தின் சார்பிலும் ஏற்படுவதுண்டு. அப்போது அது செல்வராட்சியும் சமயத்தலைவர் ஆட்சியும் ஆயின. பெயரளவில் முடியாட்சியிருக்கும் இடங்களில் கூடப் பல விடங்களில் அம் முடியாட்சியின் போர்வையில் செல்வராட்சி, சமயத் தலைவர் ஆட்சி ஆகியவையே நிலவுவ