கி. மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க நாட்டின் சிறந்த அறிஞராகிய ஸாக்ரட்டீஸ் என்பவர் அதே தனிய நிறைகுடியரசின் ஊழல்களை எடுத்துக்காட்டினார். அவர் மாணாக்கரும் சிறந்த இலக்கியப்புனைவாளரும் அறிஞருமான பிளேட்டோ என்பவர் தாம் எழுதிய ‘குடியரசு’ (ரிப்பப்ளிக்) என்ற நூலில் அதேனியக் குடியரசின் மாதிரியைப் பழித்து உதறிவிட்டு ஸ்பார்ட்டாவின் வல்லாட்சியையே உயர்வுடைய முன்மாதிரி எனக் கொண்டார். அவர் பின்வந்த மாணவரும் அலெக்சாண்டரின் ஆசிரியருமான அரிஸ்டாட்டில் தாம் எழுதிய ‘அரசியல்’ என்ற நூலிலும் ஒரளவு இதனையே ஆதரித்தார். ரோம் ஆட்சி குடியாட்சியானபோது அது ஒரு வகையில் ஸ்பார்ட்டாவின் வல்லாட்சி (வன்மைக் குழுவாட்சி)யையே ஒத்திருந்தது. ஆனால் அவர்களிடையே ஆட்சிக் குழுவினராகிய பத்ரிசியரால் பிறமக்களை நெடுங்காலம் அடக்கிவைக்க முடியவில்லை. இந்தியாவிலுள்ள ஆரியக் குழுவினரைப்போல அவர்களும் அப்பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமையாத சமயங்களில் சில உரிமைகளை விட்டுக்கொடுத்தும், அவர்களிடையே படிப்படியான உயர்வு தாழ்வுகள் கற்பித்தும் மனுநீதி போன்ற வாழ்வியல் பாகுபாட்டு முறைகளை உண்டு பண்ணினர். ஆனால் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பாற்றலால் இக்குழுவாட்சி சீர்குலையவே தனிமனிதர் வல்லாட்சி ஏற்பட்டு, அது பழையபடி பேரரசுக் காலங்களில் முடியாட்சியாக மாறிற்று. செமிட்டியரிடையே வாணிபவாழ்வில் தலைசிறந்து விளங்கிய டைர், ஸைடன் நகரமக்களும் அவர்களின் குடியேற்ற நாடாகிய கார்தேசில் வாழ்ந்த மக்களும் அவர்க |