ளிடையேயுள்ள வாணிபச் செல்வர் தேர்ந்தமைத்த ஒரு குழுவினாலே ஆளப்பட்டனர். இவர்கள் வாணிபக் குழுவமைப்பு தமிழ்நாட்டில் நாட்டுக்கோட்டைச் செட்டிமாரின் குழுவமைப்புப் போன்றதாகும். ஐரோப்பாவில் இத்தாலி நாட்டின் நகரங்களாகிய வேனிஸ், நேபிள்ஸ், பிளாரன்ஸ் ஆகியவை இவற்றைப் போலவே வாணிபத்தில் தலைசிறந்து நின்ற காலங்களில் அவையும் இத்தகைய செல்வக் குழுவாட்சியே யமைத்துக்கொண்டன. இக்குழுவின் அரசியல் மன்றம் தேர்ந்தெடுத்த ஒரு தலைவன் கீழ் நின்று ஆட்சியை நடத்திற்று. வெனிசில் இத் தலைவர் ‘டோஜ்’ 1 என்றழைக்கப்பட்டனர். இத்தாலியில் இன்றும் வல்லாட்சியாளர் (முசோலினி) போன்ற தலைவர் இசொல்லை ஒட்டியே ‘டூஸ்’ 2 என்றழைக்கப்படுகின்றனர். இச் சில குடியரசுகளின் ஆட்சியை நீக்கினால் ஐரோப்பா முழுவதிலும் ரோமப் பேரரசின்பின் ஏற்பட்ட ஆட்சிமுறை இந்தியா முதலிய கீழ்நாடுகளில் இருந்து வந்த முடியாட்சி முறையேயாகும். இங்கிலாந்திலும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலும் பெயரளவில் இவ்வாட்சிமுறையே இன்னும் இருந்துவருகிறதாயினும் அவற்றின் மேற்போர்வையினிடையே உண்மையில் ஆட்சிமுறை முற்றிலும் மாறியே வந்திருக்கிறது. பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய வெளித்தோற்றமான மாறாட்டமில்லாமலே வெட்டவெளிச்சமாக முடியரசு கைவிடப்பட்டுப் பலபடியான குடியரசுகள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் உள்ளார்ந்த தன்மைகளில் ஆங்கில நாட்டாட்சியே இக் குடி 1. Doge. 2. Duce |