யாட்சிகளுக்கெல்லாம் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் விளங்கி நிற்கிறது. இங்கிலாந்திலும் இம்மேனாடுகளிலும் இன்று நடைபெறும் குடியாட்சி குடிப் பொறுப்பாட்சி (சனநாயகம்) என்ற பெயரால் சிறப்பிக்கப்படுகிறது. இதன்படி உண்மையில் எல்லாப் பொதுமக்களும் ஆட்சியுரிமை உடையவராயினும் அதனை நேரிடையாக அனைவரும் நடைமுறைப்படுத்த முடியாதாதலால் தாமாகத் தேர்ந்தெடுத்த தேர்வாளர்கள் மூலம் ஆட்சியுரிமையைச் செலுத்துகின்றனர். மேற்கூறிய ஆட்சிமுறைகள் அனைத்தும் ஒரு நாட்டார் தம்மைத்தாமே ஆளும் ஆட்சிக்குமட்டுமே உரிய தன்னாட்சியைச் சார்ந்தவை. ஒரு நாட்டார் அடுத்தநாட்டில் ஆட்சி செலுத்துவது வெளியார் ஆட்சியாகும். எவ்வளவு சிறந்த ஆய்சியாயினும் வெளியார் ஆட்சி வெறுப்பிற் குரியது. எவ்வளவு தவறுகளுக்காளாயிலும் தன்னாட்சியே மேல் என்று தற்கால உலகம் கொள்கின்றது. அதனாலேயே "பொன்னாட்சியாயினும் தன்னாட்சியே மேல்" என் மேற்கோளுரையும் எழுந்துள்ளது. |