பக்கம் எண் :

குடியாட்சி47

டில்லாமலே குறுகிய நாட்டை மன்னர் நேரிடையாக ஆளக் கூடுமாதலால் அரசியல்முறையில் வளர்ச்சியும் ஏற்படாது போயிற்று.

   பழங்கால ஆட்சிமுறைபற்றி நமக்கு ஓரளவு விளக்கமாகக் கூறும் நூல் திருக்குறளேயாகும். இந்நூலிற் காணப்படும் பொதுக்கருத்துக்களுடன் புறநானூறு முதலிய சங்க நூல்களில் கண்ட வரலாற்றுக் குறிப்புகளையும் இணைத்து ஓரளவு அக்கால ஆட்சிமுறையைக் காணலாம். மன்னனில்லாமலே நடத்தும் குடியாட்சியின் பரந்தவகைகள் எதுவும் அக்காலத்தில் மக்கள் கனவில்கூட எழவில்லை என்பது தெளிவு. மன்னர் வலிகுன்றிய இடத்தோ மன்னர் இறந்து அரசுரிமை காரணமாகப் பிறர் மாறுபட்டுக் கலகம் விளைத்தவிடத்தோ ஏற்பட்ட குழப்பங்கண்ட அந்நாளைய மக்கள் ஆட்சிமுறைக்கு மன்னன் இன்றியமையாத உறுப்பினன் எனவும் முடியாட்சியே இயல்பான ஆட்சி எனவும் கொண்டனர். அதுமட்டுமோ? கவிஞர் மன்னனில்லா நாட்டையே கதிரவனில்லாவானம், கண்ணில்லா முகம், கணவனிழந்த காரிகை ஆகியவற்றுக்கு ஒப்பான உவமையாகக் கூறிப் புனைந்துரைக்கலாயினர்.

   இங்ஙனம் மன்னனில்லா முழுக் குடயாட்சி தமிழகத்தில் கருத்தளவில் கூட நிலவாவிடினும், குடியாட்சியின் கோட்பாடுகளே நல்லாட்சியெனப் கொள்ளப்பட்டிருந்தன. மன்னன் மனம்போனபடி ஆளுவதையும், தன் நலத்தையே பெரிதாக எண்ணி ஆளுவதையும் அவர்கள் கொடுங்கோலாட்சி என வெறுத்தனர். செங்கோன்மையுடைய அரசன் மன்னுயிர் எல்லாம் தன்னுயிர் எனக் கொள்ள வேண்டும் என்றும் உண்மையான செல்வம் குறையற்றவாழ்வுடைய குடிகளேயென்றும் திருக்குறள்