பக்கம் எண் :

குடியாட்சி51

மேலும் ஆரியர் நாடுநகர ஆட்சி கண்டது திராவிட நாகரிகம் வேர்கொண்டோங்கிய இந்தியப் பெருநிலப் பரப்பிலேயே ஆதலால் இக்கொள்கைகள் பெரும்பாலும் திராவிடச் சார்பாயிருப்பது இயல்பே யாகும்.

   ஆயினும் பழங்காலத்திலேனும் ஆரியர் வரவினால் வட இந்தியாவுக்குச் சில சிறப்பான முறைகள் சில ஏற்பட்டிருந்தன. முதற்பிரிவிற் கூறப்பட்டபடி குலத்தலைவனிடமாகக் குலத்ததைவன்குடி, அல்லது பல குடிகளில் தலைமை பெற்ற குடி நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலை வடநாட்டில் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு அளவும் காணப்பட்டது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் ஆண்ட* முதற் சந்திரகுப்தன் இத்தகைய லிச்சாவி, என்ற ஒரு குடியில் பெண்கொண்டு அதனால் வலிவு அடைந்தானாதலால் தன் காசுகளில் தன் உருவுடன் தன் துணைவி யுருவையும் பொறித்துக்கொண்டான் என்று வரலாறு கூறுகின்றது. புத்தர் பிறந்த மலைவாரக் குடியாகிய சாக்கியர் குடியிலும் இத்தகைய குழுவாட்சி அல்லது குடியாட்சி அவ்வப்போது நிலவிற்று என்று தோன்றுகிறது. ஆனால் ஆரியர் கூட்டுறவால் ஏற்பட்ட இச் செய்திகள் பெரும்பான்மை திராவிடச் சார்பான இந்திய நாகரிகத்தில் இடம் பெறாது அழிந்துபோயின.

   பாரசீகர், கிரேக்கர் படையெடுப்புக்களால் வட இந்திய அரசியல் வாழ்வு தற்காலிகமாகக் குழப்பமுற்ற தெனினும், அவை நிலவரமாக ஓர் அரசிய லுணர்ச்சியையும் உண்டுபண்ணின. இதன் பயனாக நாட்டை ஒன்று


   *கே. வி. அரங்கசாமி ஐயங்கார் எழுதிய "இந்திய வரலாறு முசல்மான்களுக்கு முந்தியகாலம்" பார்க்க.