பக்கம் எண் :

52குடியாட்சி

படுத்தி ஆளவேண்டும் என்ற கருத்து வளர்ச்சியடைந்தது. சாணக்கியனை அமைச்சனாகக் கொண்ட மோரிய அரசன் சந்திரகுப்தன் நாட்டை அங்ஙனம் ஒன்றுபடுத்தியதுடன் வன்மையும் ஒழங்கும் உடைய ஆட்சியையும் நிறுவினான். அசோகனின் பின் இவ்வாட்சி வீ்ழ்ச்சியடைந்ததாயினும் பின்னும் கனிஷ்கன், விக்கிரமாதித்தன், ஹர்ஷன், பிருத்திவிராசன் முதலிய பழம் பெருமன்னர்களாலும் அக்பர், சிவாஜி முதலிய பிற்காலப் பெருமன்னர்களாலும் மீண்டும் மீண்டும் இத்தகைய பேரரசிற்கான முயற்சி மேலிட்டு வளர்ந்தது. ஆனால் இவ்வளர்ச்சி நாட்டுமக்கள் வாழ்வை அடிப்படையாகக் கொண்டதல்லவாகலின் தமிழ் நாட்டுப் பழம் பேரரசுகள் போலவே சிலகாலம் நல்லாட்சியும் புகழும் தந்து மாண்டது.

   தமிழ் நாட்டையும் வடநாட்டையும் ஒருங்கே படிப்படியாய் வென்று இந்தியப் பெருநிலப் பரப்பில் ஒரு பேரரசை ஆங்கிலேய ஆட்சி 17-முதல் 19-ம் நூற்றாண்டு வரை முயன்று நிறுவிற்று. ஓரளவு இப்பேராட்சியால் மேற்படையான ஒற்றுமை தோன்றினும் வெளிநாட்டார் ஆட்சி வலியால் ஏற்பட்ட இவ்வொற்றுமை நாட்டொற்றுமையை விளைவிக்காமலே நிலவுகின்றது. இனித் தமிழ் நாட்டு வளர்ச்சியும் இந்தியப் பெருநிலப் பரப்பிலுள்ள அயல்நாடுகளின் வளர்ச்சியும் ஒன்றுபட்டு நிலவுமா? அல்லது வேறுபட்டு நிலவுமா? என்பது வெளிநாட்டுப் பேரரசாட்சியின் தலைமை நீங்கினால்தான் தெளிவுபடக்கூடும்.

   இதற்கிடையில் அரசியல்வகை நடைமுறைகளில் பிற்பட்டுநிற்கும் தமிழ்நாட்டுக்கும், இந்திய நாடுகளுக்கும் முன்மாதிரியாய் விளங்கி வரும் அரசியல்கள் மேனாட்டு அரசியல் முறைகளேயாம். அவற்றுள் காலப் பழை