மையாலும் சிறப்பாலும் முதன்மைபெற்று நிற்பது ஆங்கிலநாட்டு (அல்லது பிரிட்டன்நாட்டு) அரசியலேயாகும். அந்நாட்டின் அரசியல் வளர்ந்த ஆற்றையும் பிறநாடுகளின் அரசியல் வளர்ந்த ஆறுகளையும் ஆய்ந்து ஒப்பிட்டு நோக்கினால், அவ்வாராய்ச்சி நம் நாட்டின் எதிர்கால அரசியலை அமைக்க நமக்கு நல்ல தூண்டுதலாகும் என்பது உறுதி. 5. ஆங்கில நாட்டு அரசியலுரிமைப் போராட்டம் 1. பயிற்சிக் காலம் உலகின் பண்டைய அரசியல் முறைகள் பெரும் பாலும் முடியரசுச் சார்பானவை என்றும், அவை ஆரியரல்லாத மக்களிடையே முழுவளர்ச்சியடைந்து மேல் வளர்ச்சிக்கு இடமில்லாமல் மரத்துப் போயின என்றும் மேலே கூறினோம். தமிழ்நாட்டிலும், வட இந்தியாவிலும், மாசிதோனியாவிலும், ரோமிலும் இதே அரசியல் பேரரசு நிலையில் விரிவடைந்தனவாயினும் முடியரசுத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டதில்லை. வரலாற்றின் இருட்டுக்காலம் என்று அழைக்கப்படும் இடைக்காலங்களில் (கி.பி. 500 முதல் 1500 வரை) கீழ்நாடுகளிலும் சரி, மேல் நாடுகளிலும் சரி, அரசியல் முறை பெரிதும் இப் பண்டைய முடியரசு முறையையே பின்பற்றி நின்றது. இப் பண்டைய முடியரசுகளனைத்தும் வீழ்ச்சியடைந்து ஐரோப்பா எங்கும் குடியரசுகள் நிறுவப் பெற்றது 19-ம் நூற்றாண்டிலேயேயாகும். இவ்வைரோப்பிய அரசியற் பெரும் புரட்சிகளுக்கு வழிகாட்டிகளாய் நின்றவை 1786-ல் நடைபெற்ற ஃபிரஞ்சுப் புரட்சியும் 1768-ல் நிகழ்ந்த அமெரிக்கப் புரட்சி என்ற அமெரிக்கநாட்டு |