விடுதலைப் போரும், இவ்விரண்டுக்கும் முந்திப் பிரிட்டனில் நடைபெற்ற 1688-ம் ஆண்டைய ஆங்கில அரசியல் புரட்சியுமே ஆகும். இவற்றுள் காலத்தால் முந்தியதும் மற்ற இரண்டிற்கம் தூண்டுதலாயிருந்ததும் ஆங்கிலப் புரட்சியே, மேலும் மற்றப் புரட்சிகள் பண்டைய முடியரசின் சீர்கேடு முற்றியபின் அவற்றின் வீழ்ச்சியால் ஏற்பட்ட திடீர்ப் புரட்சிகள் ஆகும். பிரிட்டனின் முன் மாதிரியும் பிறநாடுகளின் முன்மாதிரியும் வெளித்தாக்குதல்களாக நின்று தூண்டியிராவிட்டால் அப்புரட்சிகள் திடீரென்று தோன்றியிருக்கமாட்டா, ஆங்கில நாட்டுப் புரட்சியோவெனில் இவற்றைப் போன்ற திடீர்ப் புரட்சியுமன்று இவற்றைப் போலக் குருதி வெறியும் கலாங்களும் கொலைகளும் நிறைந்ததும் அன்று, வெளித் தாக்குதல் எதுவுமின்றி அது ஆங்கில அரசியல் வாழ்வில் தற்போக்காகவும் படிப்படியாகவும் நெடுங்காலமாக நிகழ்ந்து வந்த அரசியல் முன்னேற்றத்தின் பயனேயாகும். எனவே ஆங்கில நாட்டு அரசியல் வளர்ச்சி முறையை ஆராய்பவர்க்கு மட்டுமின்றி உலக அரசியல் முறையை ஆராயப் புகுபவர்க்கும் இவ்வாங்கில நாட்டுப் புரட்சியும் அதனைப் பயனாகக் கொண்ட ஆங்கில நாட்டு அரசியல் வளர்ச்சியின் வரலாறும் இன்றியமையாத படிப்பினைகள் ஆகும். இதுவன்றி ஆங்கில அரசியல் இன்னொரு வகையிலும் தலைமை உடையது. மற்ற அரசியல் முறைகள் எல்லாம் பண்டைய முறையிலேயே வளர்ச்சி பெறாது நின்று அஃது அழிவுற்ற பின்னர் தற்கால அரசியலைப் புதுவதாகப் புனைந்து கொண்டன. நேர்மாறாகப் பிரிட்டனிலோவெனில், அரசியல் பழைய உருவினின்றும் |