பக்கம் எண் :

குடியாட்சி55

என்றும் முற்றிலும் விலகிச் செல்லாமல் படிப்படியாகப் புத்துயிர் பெற்றுப் புதுமைபெற்று வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. எனவே தான் பழைமையில் நின்றுவிட்ட அரசியல்கள் பழைமை சீர்கெட்டபின் புதுவது புனைய முயலும்போது புதுமுறை வளர்ச்சிபெற்றுவிட்ட பிரிட்டனின் அரசியலைப் பின்பற்ற வேண்டி வந்தன. இங்ஙனம் பிரிட்டனின் அரசியல் பழைய உலக அரசியலுக்கும் புதிய உலக அரசியலுக்கும் ஒரு பாலமாகவும், புது அரசியல் முறைகள் அனைத்தினுக்கும் தாயகமாகவும் விளங்குகிறது. பிரிட்டனின் அரசியல் வளர்ச்சிக்கு நிலைக்களனாக விளங்கிய ஆங்கில அரசியல் மன்றும், அரசியல் மன்றங்களின் தாய் (Mother of Parliament) என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டனைச் சார்ந்து வளர்ச்சியடைந்து உரிமைக் குடியேற்ற நாடுகளாகிய கனடா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா முதலியவையும் பிற அரசியல் சார்புடைய நாடுகளாகிய இந்தியா, எகிப்து போன்றவையும் சார்பற்ற நாடுகளான அமெரிக்கா, ஃபிரான்சு, செர்மனி முதலிய நாடுகளும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பிரிட்டனின் அரசியலையோ அதன் கூறுகளையோ முன்மாதிரியாகக் கொண்டு தம் அரசியல் அமைய விளங்குகின்றன.

   ஆங்கில அரசியல் வளர்ச்சியை விரித்துரைக்கப் புகுமுன் அதன் வளர்ச்சி முறையின் பயனாக ஏற்பட்ட ஒரு புதுமையை விளக்குதல் வேண்டும். இவ்வளர்ச்சி மற்ற நாடுகளுக்கெல்லாம் முன்மாதிரியமைந்ததாயினும் ஒரே ஒரு வகையில் பழைமைப் பற்றுடையதாகவே உள்ளது. மற்ற அரசியல்கள் பழைமையில் சலிப்புற்று அதனை ஒழித்ததுபோல் ஆங்கில அரசியல் என்றும் பழைமையை ஒழிக்க