வில்லை. அதன் உள்ளுறை உயிரில் எவ்வளவு மாறுதலும் வளர்ச்சியும் ஏற்பட்ட காலத்திலும் அதன் உடலமைப்பு முற்றிலும் மாறாமல் இருந்தே வருகிறது. எனவே இன்றைய ஆங்கில அரசியல் முறையின் உள்ளுயிர் புத்தம் புதிய அரசியல் முறைகளை ஒத்தே காணப்படினும், அதன் அமைப்பு முறையாகிய வெளிச் சட்டத்தில் அதன் பண்டைய உருவின் சின்னங்களும் இடைக்கால மாறுதல்களின் சின்னங்களும் மாறாமலிந்தே வருகின்றன. எடுத்துக்காட்டாக மன்னர் உரிமைகள் இன்று பெரும்பாலும் அரசியல் மன்றத்தினாலும் அதன் உரிமைகளுக்குக் கட்டுப்பட்ட அமைச்சர்களாலுமே செயற்படுத்தப்படுகின்றனவாயினும் முடியரசு அப்படியே இன்றும் நிலைத்திருக்கிறது. அதன் உரிமைகளும் பெயரளவில் மாறாமலே இருந்து வருகின்றன. எனவே ஒரளவு இங்கிலாந்தின் இன்றைய அரசியல், வரையறுக்கப்பட்ட முடியரசு என்று கூறினால் தவறாகாது. மேலும் அரசியல் வளர்ச்சி முறையில் முடியரசுக்கு அடுத்தபடியான ஆட்சி முறை, குழு ஆட்சிமுறையும் பெருமக்கள் ஆட்சி முறையும் ஆகும். குழு ஆட்சிமுறையின் சின்னங்களாக இன்றும் பிரிட்டனின் அரசியலில் மன்னர் அவையும் (Privy Council) அமைச்சர் குழுவும் (Cabinet) நிலை பெற்றுள்ளன. பெருமக்கள் ஆட்சிக்கு அறிகுறியாகப் பெருமக்கள் அவை (House of Lords) இன்றும் நிலவுகிறது. இவையெல்லாவற்றினுக்கும் மேலாகப் பெதுக் குடியாட்சி (democracy) முறை பொது அவை (House of Commons) மூலம் நடைபெறுகிறது. அமைச்சர் குழுவின் அமர்வுக்குப் பொது அவையே காரணமாயிருப்பதால் பொறுப்பாட்சியும் முழுமையும் செயல் முறையி |