லுண்டு. இன்னும் ஆட்சி வகுப்புகளில் (Departments) நிலைபெறுபவரும் முறைமன்றத் தலைவரும் (Judges) பிற பணியாளரும் அரசியல் மன்றத்தார்க்கும் அமைச்சர் குழுவிற்கும் முற்றிலும் கட்டுப்படாமல் தனிஉரிமை உடையவராயிருத்தலின் திறலாளர் ஆட்சியும் (Bureaucracy) நிலைபெறுகிறது என்னலாம். இங்ஙனமாக ஆங்கில அரசியல் முறை தன்னிடத்தே உலகின் அரசியல் வளர்ச்சியின் வரலாற்றையே கொண்டுள்ள தென்னலாம் பொதுப்படையாக ஆங்கில அரசியல் வளர்ச்சியில் மூன்று பெரும்படிகளைக் காணலாம். முதலாவது பயிற்சிக்கலாம், இது 1688-ம் ஆண்டுப் புரட்சியுடன் முடிவடைகிறது. இரண்டாவது பகுதி 1832-ம் ஆண்டு ஏற்பட்ட முதல் அரசியல் பெருஞ் சீர்திருத்தத்துடன் முடிவது. இதனை முயற்சிக்காலம் என்னலாம் 1832-க்குப் பின் வெளித் தோற்றத்தை நீக்கிப்பார்த்தால் அரசியல் முறை முழுக் குடியாட்சியாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இதனை யாம் வளர்ச்சிக்காலம் என்போம். முதற்பகுதியாகிய பயிற்சிக் காலத்தையும் கருநிலைக்காலம் என்றும் உயிர்ப்புக் காலம் என்றும் தேர்வுக் காலம் என்றும் உள்முதிர்வுக்காலம் என்று போராட்டக் காலம் என்றும் ஐந்து கூறுகள் ஆக்கலாம். கருநிலைக் காலம் ஆங்கில மக்கள் தம் பண்டைய தாயக நாடாகிய செர்மனிய நாட்டிலிருந்து இங்கிலாந்து மீது படையெடுத்து வந்து குடியேறிய காலமாகிய 5-ம் நூற்றாண்டு முதல் நார்மானியர் படையெடுப்புக்காலமாகிய 1066-வரை என்னலாம். இக்கால ஆங்கில மன்னர் நிலை தொடக்ககால ஆரியரது குல முதல்வர் நிலைக்கு மிகவும் அண்டிய நிலையுடையதேயாகும். மன்னர் ஆண்ட பகுதி |