பக்கம் எண் :

குடியாட்சி61

அளவுக்குப் பொது மக்கள் அவர்களைப் போற்றினர். அதுவன்றி விரைவில் அவர்கள் வெளி நாட்டினர் என்ற எண்ணத்தையும் மக்கள் மறக்கலாயினர்.

   மூன்றாவது நார்மானிய அரசனாகிய முதலாம் ஹென்ரி பழைய ஆங்கிலக் குடியில் வந்த மட்டில்டா அல்லது மாட் என்ற இளவரசியை மணந்து இப்போக்கை வலியுறுத்திக் கொண்டான். அத்துடனமையாது அவன் ஆட்சிக்கு வந்தவுடன் தானே பொதுமக்களுக்கு நல் ஆட்சி உறுதி அளிக்கும் அரசுரிமைத்தாள் ஒன்று வழங்கினான். இதுவே ஆங்கில அரசியல் வளர்ச்சி வரலாற்றில் எழுத்து மூலம் மன்னர் உரிமைகள் வரையறுக்கப்பட்ட முதல் உரிமைத்தாள் ஆகும். இந்த அரசன் ஆட்சிலேயே ஆட்சி முறையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன.

   நாம் மேற்குறிப்பிட்டபடி பெருமக்களின் வலிமையை அடக்க முனைந்த நார்மானிய அரசர் அப்பெருமக்களுக்கு மிகுதியான வலிமைதர உதவக்கூடும் பழைய பேரறிஞர் மன்றத்தைப் பெரும்பாலும் கூட்டாமல் புறக்கணித்து வந்தனர். அப்பேரவையில் உறுப்பினராயிருந்து வந்தவருள் அரசன் ஆட்சியில் அவனுக்கு உதவும் பேரலுவலாளரும் துணைவரும் அறிவுரை கூறும் வல்லுநரும் இருப்பதுண்டு. மன்னன் அவர்களை மட்டும் தனிப்படத் திரட்டி மன்னரவையில் சேர்த்துக் கொண்டான். புதுவரிகள் வேண்டிய போதும் ஆட்சிமுறைச் சிக்கல்களில் உதவி வேண்டிவந்த போதும் பெருமக்கள் தொடர்புள்ள பெருவழக்குகளை மன்னன் ஆராயவேண்டி வந்த போதும் அவனுக்குப் பழைய பேரறிஞர் அவையின் இடத்தில் நின்று உதவியது இம்மன்னரவையே (Curia Regis). பொதுவாக அரசியல் காரியங்களை ஆராய்ந்து