பக்கம் எண் :

10தமிழகம்

"ஐரோப்பியப் பாதிரிமார் தமது கருத்தை நியூசீலந்தில் செலுத்திய காலத்தில் அவர்களுடைய நாட்டம் மேயோரிஸ் (Maoris) என்னும் பண்டுள்ள அத்தேசத்தவரின் மொழியிற் சென்றது. அதை அவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் அது தமிழுக்கு எவ்வளவோ அடுத்ததாகக் காணப்பட்டது.1 அதுகுறித்து தேயிலர் (Taylor) என்னும் பாதிரியார் முப்பது வருஷங்ளுக்கு முன்னே வெளியிட்டிருக்கின்றார்.
"மேற்கூறிய காரணங்களால் தென்னிந்தியாவின் மேற்குக்கரையிலிருந்து நியுசீலந்து வரைக்கும் பண்டு ஒரேமொழி நடைபெற்று வந்ததாகக் காணப்படுகின்றது. இதில் ஆத்திரேலியாவும் உட்பட்டிருக்கலாம்."

 -திருவாளர் டி. பொன்னம்பல பிள்ளை, M.R.A.S.

"மனிதனுடைய அறிவு எட்டிய ஒரு காலத்தில் தென்னிந்தியா ஆசியாவின் பகுதியாக விளங்கவில்லை யென்பதை நில நூல், உயிர்களின் வரலாறு முதலியன உறுதிப்படுத்துகின்றன. பல காரணங்களால் தென்னிந்தியா தெற்கேயிருந்த பெரிய கண்டத்தில் மிச்சமெனக் கருதப்படுகின்றது. இலங்கைப் புத்தர், புராணகாரர் முதலியோர் எழுதியுள்ள வரலாறுகளும் மேற்குக்கரையில் உள்ளவர்களின் கன்ன பரம்பரையும் இலங்கையும் தென்னிந்தியாவும் சமீபத்தில் பல குழப்பங்களுக்குள்ளாயின வென்பதைக் குறிப்பிடுகின்றன.2

      1. This list of words by itself is sufficient to prove the primalidentity of the Maori and Egyptian languages.-Book of the beginings-P.17. Gerald Massey
இதனால் தமிழுக்கும் மயோரி எகிப்திய மொழிகளுக்கும் தொடர்பிருப்பதும் விளங்குகின்றது.
     2. "Geology and Natural History make it alike certain at a time within the bounds of human knowledge, southern India did not form part of Asia. A large continent of which this country once formed part has ever been assumed as necessary to account for the different circumstances. The