தமிழ்நாட்டின் தொன்மை நிலை | 9 |
ஆராய்ச்சியில் இத்தரை (குமரிநாடு) குமரிக்கு நேர் தெற்காகக் காணப்படவில்லை. சற்றுச் சரிந்து தென்கிழக்காகவிருக்கலாம். ஆசியாக்கண்டத்தின் ஒரு படம் எடுத்துப் பார்த்தால்தான் நான் கூறுவது எளிதிற் புலப்படும். குமரிக்கும் இலங்கையின் வடபாலுக்கும் ஒரு வரை கீறி அவ்வரையிலிருந்து தென்கிழக்காகப் போகிறதாயிருந்தால் இலங்கை, மலேயா, சாவா, சுமத்திரா, பாண்டா, செலிபிசு, போனியோ, புதுக்கினி, நியூசீலந்து முதலான எண்ணிறந்த தீவுகளைக் காணலாம். | "தெளிந்த வானத்தில் உடுக் கூட்டங்கள் விளங்குதல்போல் நீருக்கிடையில் இவ்வகையாக ஆங்காங்கு நிலத்துண்டுகள் பல அளவிலும் இருப்பதைப்பற்றி எண்ணும்போது, தென்னிந்தியா முதல் நியூசீலந்து வரைக்கும் ஒருகாலத்தில் கடுந்தரையாயிருந்ததாகவும் ஏதோ காரணத்தால் அது பிளப்புண்டு, பலவிடத்திலும் பள்ளம் விழுந்து கடலுடன் தொடர்புபட்டுக் கடல்நீர் ஏறினதாகவும் கருதவேண்டியிருக்கின்றது. இக்கருத்தை ஐரோப்பிய கலைஞர்களும் சரித்திர ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றார்கள். கடலின் கண்ணுள்ள, மண் கல் முதலியவற்றை ஆராயும்போது மேற்கூறித்த கருத்தை நிலைநாட்டுகின்றார்கள். | "இக்கொள்கையை நிலைநிறுத்த வேறு காரணங்களுண்டோவென ஆராய்வோம். மேற்கூறிய யாவா முதலிய தீவுகளில் நடைபெற்றுவரும் மொழிகள் தமிழ்மொழிக்கு மிக உறவுள்ளனவாகக் காணப்படுகின்றன. |
| was situated to his beloved daughter Ela. To this day the southern land now submerged under the sea is known to the masses as the dominion of Yama, the Lord of the South. The land of Ela was Kumarinadu ruled and presided by queens. Even today in Malabar, a portion of the Tamilagam, the queen is the owner of the kingdom and the brother who governs the people is her representative. The succession descends in the female line; and women in Malabar are heiresses and owners of property and are treated with greater regard and consideration than men.- Tamilian Antiquary No. 1. | | |
|
|