டது. இதுபற்றியே இயமனுடைய உலகம் தெற்கில் உள்ளது என்னும் கோட்பாடு இன்று வரையும் உள்ளது. கூற்றுவனாகிய இயமனும் இவனும் ஒருவனாகப் பிற்காலத்திற் கருதப்பட்டமையினாற்போலும் இறந்தவர்கள் இயமனாட்டில் (தெற்கில்) வாழ்கின்றார்கள் எனக் கருதப்பட்டு அவர் தென் புலத்தார்என வழங்கப்படலாயினர். வடக்கே இருந்த நாடு பெண்ணால் ஆளப்பட்டமையின் குமரி நாடு என்று வழங்கப்பட்டது. தமிழகத்தின் ஒரு பகுதியாகிய மலையாளத்தில் பெண்களுக்கே ஆண்களிலுங் கூடிய அதிகாரமுண்டு. அரசுரிமையும் சொத்துரிமையும் பெண்வழியையே சாருகின்றன. தமிழ்நாட்டில் பெண்களே நெடுங்காலம் ஆட்சிபுரிந்திருக்கிறார்கள். தீர்த்த யாத்திரையிற் சென்ற அருச்சுனன் பாண்டி நாட்டில் பெண்ணரசு செலுத்திக்கொண்டிருந்த சித்திராங்கதை (அல்லி)யை மணந்து பப்புருவாகனைப் பெற்றான் என்று பாரதம் கூறுகின்றது.1 |
"திராவிடமக்களின் அரசனாகிய மனு, நாட்டை இரண்டாகப் பிரித்துத் தென் பகுதியை இயமனுக்கும் இராசதானி யிருந்த பகுதியை இளை என்னும் புதல்விக்கும் அளித்தான் எனப் புராணங்கள் கூறுகின்றன. கடலுள் மறைந்துபோன தென்தேசம் இன்றுவரையும் இயமன்நாடு என மக்கள் ஞாபகத்திற் கொண்டுவருகின்றனர். இளையின் நாடு பெண்களால் ஆளப்பட்டுவந்தது. தமிழகத்தின் ஒரு பகுதியாகிய தமிழ்நாட்டில் அரசி நாட்டுக்குரியவள்; அவளுக்குப் பதில் ஆளாக அவள் உடன் பிறந்தான் நாட்டை ஆளுகின்றான். அரசுரிமை பெண்வழியாக வருகின்றது. மலையாளத்தில் பெண்களே சொத்துக்கு உரியோர். அவர்கள் ஆடவரிலும் சிறப்பாகவும் மேலாகவும் மதிக்கவும் நடத்தவும்பட்டு வருகிறார்கள்.2 |
|
1. பாரத யுத்தகாலம் கி. மு. 1300 |
2. " The puranas related that Manu, the Lord of the Dravidas divided the country into two halves giving southern portion to his son Yama and the northern where his capital |