பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை7

மலை நாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வட பெருங்கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலால்" எனக் கூறிய உரையில் கடல் கொண்ட நாடுகளும் பிறவும் இவை இவை என விரித்துரைத்தார்.
இனிக் குமரி யாற்றிற்கும் பஃறுளி யாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள நாட்டரசனாகிய செங்கோனை முதலூழித் தனியூர்ச் சேந்தன் பாடிய `செங்கோன்ழு தரைச் செலவுழு என்னும் ஒரு சிறு நூல் உள்ளது. இந்நூலினும் உரையினும் உள்ள ஏழ்தெங்க நாட்டு முத்தூரகத்தியன், பேராற்று நெடுந்துறையன் முதலிய புலவர் பெயர்களும் பெருவள நாடு மணிமலை முதலிய இடப்பெயர்களும், அடியார்க்கு நல்லார் உரையிற் கண்ட நாடுகள் கடல் கொள்ளப்படுவதற்கு முன் உள்ளன என்பதை வலியுறுத்துவன,1

2. குமரி நாடு என்னும் பெயர்க் காரணம்

மனு என்பவன் ஒரு தமிழ் வேந்தன். இவனுக்கு இளை என்னும் ஒரு பெண் மகவும் இயமன் என்னும் ஆண் மகவும் இருந்தனர். மனு தான் ஆண்டுவந்த நாட்டின் தென் பகுதியை இயமனுக்கும், வட பகுதியை இளைக்கும் அளித்தான். இயமன் ஆண்ட தென்னாடு கடல்வாய்ப்பட்

1. செங்கோன் தரைச் செலவு அண்மையில் எவராலோ புதிதாகப் பாடப்பட்டதெனச் சிலர் ஐயுறுவர். இது மதுரைச் சுந்தர பாண்டியன் ஓதுவார் என்பவரால் பழைய ஏட்டுப்பிரதிகளிற் காணப்பட்டதென்று கூறி 1902ஆம் ஆண்டிற் பதிக்கப்பட்டது. இதில் அடங்கிய பாடல்கள் ஏழு. துடிசைக் கிழார் சிதம்பரனார் அவர்கள் தமக்குக் கிடைத்த திருக்குறட் பிரதி உரை, இறையனாரகப்பொருள் மூலம் முதலிய பழைய ஏடுகளுடன் செங்கோன் தரைச் செலவின் 20 பாடல்கள் (உரையின்றிக்) கிடைத்தனவென்று கூறுகின்றனர். அந்நூற் பாடல்கள் வெவ்வேறு இடங்களில் பழைய ஏடுகளிடையே கானப்பட்டமையின், அந்நூலின் பழமையைக் குறித்து ஐயுறுதல் வேண்டா. இந்நூல் சூரியநாராயண சாத்திரியார், மறைமலையடிகள் முதலிய தமிழறிவு சான்றோர்களால் தமது நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.