பகுதியே இப்பொழுது காணப்படும் பெரிய இந்திய பாலை நிலமாகும்.1 |
அதனை யடுத்து அதன் பெயரால் ஒரு மலைத்தொடரும் விளங்கியது. பிற்காலத்தோர் அதற்கு மகேந்திரம் எனப் பெயரிட்டனர். இரண்டு ஆறுகளுக்கு மிடையே எழுநூறு காவதம் நிலப்பரப்பிருந்தது. ஒரு காவத2 மென்பது எண்ணாயிர முழங்கொண்ட தூரம். எழுநூறு காவதம் நிலப்பரப்பும் நாற்பத்தொன்பது சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விளங்கிய பஃறுளி குமரி என்னும் ஆறுகளையும் அவற்றினிடையே கிடந்த நாற்பத்தொன்பது நாடுகளையும் கடல் கொண்டமையைப், "பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள" என்று கூறுவதுடன் அமையாது "வடிவேலெறிந்த வான்பகை பொறாது" என்று இக்கடல்கோட்குங் காரணமுங் கூறுவர் ஆசிரியர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்துக்கு உரைகண்ட அடியார்க்கு நல்லார், `நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் என்புழிழு "அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றுக்கும் குமரி யென்னும் ஆற்றுக்குமிடையே எழுநூற்றுக்காவத ஆறும் அவற்றின் நீர் மலிவானென மலிந்த (1) ஏழ் தெங்கநாடும் (2) ஏழ் மதுரை நாடும் (3) ஏழ் முன்பாலை நாடும் (4) ஏழ் பின்பாலை நாடும் (5) ஏழ் குன்ற நாடும் (6) ஏழ் குணகாரை நாடும் (7) ஏழ் குறும்பனை நாடுமென இந்நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன் |
|
1. "The result of geological investigation shows that in a remote age a sea actually covered a large portion of Modern Rajaputana extending as far as South and East as Aravalli Mountain which Geologists have designated by the name of Rajaputana sea" - Rig Veda India -p7 |
2. விரற் பன்னிரண்டு கொண்டது சாணாம். சாண் இரண்டு கொண்டது முழமாம். முழம் நாலு கொண்டது கோலாம். கோல் 500 கொண்டது கூப்பீடாம். கூப்பீடு நான்கு கொண்டது காவதமாம் (யாப்பருங்கலவிருத்தி , ப். 173.) |