"முதலாம் காலப் பகுதியின் கடைக்கூறில் இந்து சமுத்திரத்தினூடே விளங்கிய ஒரு கண்டம் இந்தியா தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா முதலிய நாடுகளை இணைத்துக் கொண்டிருந்தது." |
"இந்தியாவின் தென்பகுதி கங்கையாறு பாயும் நிலப்பரப்புக்கும் இமயமலைக்கும் வேறானது. இது இப்போது இந்து சமுத்திரம் இருக்கின்ற இடத்தில் ஆப்பிரிக்கா வரையில் தொடர்ச்சியாக நீண்டிருந்த பழைய கண்டத்தின் மிச்சமாயிருக்கின்றது. இதிலுள்ள குன்றுகள் உலகத்திலுள்ள மிகப் பழையனவற்றுட் சேர்ந்தன. இவை ஒரு காலத்தில் நீரில் மூழ்கியிருந்த குறிகள் இல்லவேயில்லை. இக்குன்றுகளின் பலவிடங்களிற் கருங்கற்பாறை தகடாகப் பரவியிருக்கின்றது. ஆகையால் அஃது உலகில் முற்காலத்தில் உயிர்கள் தோன்றும் முன்னர் இருந்தபடியே தெற்கில் இருக்கின்றது. சிந்துகங்கைச் சமவெளி சிந்துநதி தொடங்கிக் கங்கைக் கழிமுகம் வரையில் ஆயிரத்திருநூறு மைல் தொலைவு இடைவெளியின்றி நீண்டிருக்கின்றது. மண்ணுலகு பதப்பட்டுக் கொண்டிருக்கும்போது இமயமலை கிளம்பும் முன்னர்க் கங்கை நிலவெளியிருக்கும் இடம் கடலாயிருந்தது. அந்தக் கடலின் தெற்குக் கரையில் தென்னிந்தியா விருக்கிறது. இமயமலை கிளம்பியபோது கடல் மறைந்தது. இமயமலையிலிருந்து ஓடும் ஆறுகள் வாரிக்கொண்டு வந்த மண்ணினால் இப்போதுள்ள வெளி நிலம் உண்டானது."2 |
|
Ceylon Budhists and the Puranic writers and the local tradition of the west coast all indicate a great disturbance on the point of the Peninsula and Ceylon within recent times." -Topinard |
1. "India, South Africa and Australia were connected by an Indo-oceanic continent in the Permian Epoch." - H.F. Blanford |
2. "Peninsular India or the Deccan (literally, the country to the South) is geologically distinct from the Indo-Gangetic plain and the Himalaya. It is the remains of a former continent which stretched continuously to African in the space now, occupied by the Indian Ocean. The rocks of |