விரித்திருக்கின்றனர். இவ்வேழனுள் காஞ்சி பாடாண்டிணையிரண்டினும் உலகின் நிலையின்மையையும், தலைவனைப் புகழ்தல் காரியத்தைப்பற்றியுங் கூறுவர். ஏனைய ஐந்திணைகளும் அக்காலப் போர்த்திறனை விளக்குவனவாம். பண்டைத் தமிழ்மக்கள் போர் செய்தற்கு ஏகுங்கால் செய்யும் சமர் சம்பந்தமான வெவ்வேறு பூக்களைச் சூடிப் பொருதல் வழக்கமா யிருந்தமையின், அவ்வப் பூக்களின் பெயரானே ஒழுக்கத்தையும் கூறினர் தொல்காப்பியர். | "இரு பெரு வேந்தர் தம்முள் பொருவது கருதியக்கால் ஒருவர் மற்றவர் நாட்டிலுள்ள ஆநிரையைக் கவர்தல் குறித்துத் தமது தண்டத் தலைவர், முனைப்புலங் காப்போர் முதலியோரை ஏவுவர். அன்னோர் படைகளைக் கூட்டி நல்வாய்ப்புள் முதலிய நற்சகுன மொழிகளைக் கேட்டு, ஒற்றறிய வல்லாரை முன்னர் ஏவி, அவர் ஏவியவாறே துப்பறிந்து பின் சென்று நிரை நிற்கும் புலங்களுக்கருகே மறைந் தொழுகிப் பின் ஒய்யெனக் கிளம்பி நிரை காத்தோரைக் கொன்று வீழ்த்தி ஆநிரையை மெத்தெனவாய் உடன்கொண்டு தம் நாடு செல்லுவர். செல்லுங்கால் தம்மைத் தொடர்ந்து பொரவந்தாரைப் பின் அணியத்தார் தாமே நின்று பொருது வீழ்த்த முன்சென்றார் ஆநிரையை இன்புடன் நடத்திச் செல்வர். இங்ஙனம் எதிர்த்தவரை யெல்லாம் மாய்த்தவழி, ஆநிரையைத் தம் ஊர்ப்புறத்தே கொண்டுவந்து நிறுத்தி, ஊரிலுள்ளோர்க்கும், இரவலர்க்கும் அவற்றைப் பகுத்துக் கொடுத்துத் தாம் கொண்ட வெற்றிக் கறிகுறியாக உண்டாட் டயர்ந்து களிப்பர். நிரை பறிகொடுத்தோரும் இங்ஙனமே பொருது நிரை மீட்டுப் போதலுமுண்டு. இவ்விரண்டும் வெட்சி யென்றார் தொல்காப்பியர். பிற்றைநாட் போந்தோர் நிரைமீட்டலைக் கரந்தை யெனப் பிறிதொரு பெயராற் கூறுவர். | "இங்ஙனம் பசுத்திரளைக் கவர்ந்தபின் பெருவேந்தன் நாடுகொள்ளும் உள்ளத்தனாய் நிமித்திகன் நல்லநாளென்று கூறிய நாளிலே தன் குடை, வாள் முதலியவற்றைப் புறப்படச் செய்து, எள்ளுருண்டை, தினைமா, பொரி, அவரை, | | |
|
|